Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறுமியின் உயிருக்கு எமனாக மாறிய ஷவர்மா.. தமிழகம் முழுவதும் ஹோட்டல்களில் ரெய்டு.. அமைச்சர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாமக்கல்லில் உள்ள உணவகத்தில் ஷவர்மா கிரில் சிக்கன் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் ஆய்வு நடத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து உணவகங்களில் சாப்பிட போனால் பலருக்கும் மோசமான அனுபவங்களே ஏற்படுகிறது. ஆறிப்போன உணவு, ருசியில்லாத பழைய உணவுகளைக் கூட பறிமாறுகின்றனர். சில நேரங்களில் கெட்டுப்போன உணவுகளைக் கூட கொடுத்து உயிருக்கே உலை வைத்து விடுகின்றனர். அப்படித்தான் நாமக்கல் மாவட்டத்தில் சிறுமியின் உயிருக்கு எமனாக மாறியுள்ளது ஷவர்மா. உயிர்பலி ஏற்பட்ட பின்னர்தான் இப்போது உணவகங்களில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Shawarma death in Namakkal Minister M.Subramanian orders Raid on hotels all over Tamil Nadu

நாமக்கல் சிலுவம்பட்டியைச் சேர்ந்த நவீன்குமார், இவர் கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு, பரமத்திசாலையில் ஐ வின்ஸ் என்ற உணவகத்தை ஒரு வருடத்திற்கு முன்பு துவக்கி நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் கடந்த 16ஆம் தேதி மதியம், மாலை, இரவு உணவுகளை சாப்பிட்ட பலருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த சுஜாதா,38 என்பவர் கடந்த சனிக்கிழமை இரவு தனது சகோதரன் சினோஜ்,36, மகள் கலையரசி,14, மகன் பூபதி,12ஆகிய மூவரையும் இரவு உணவு வாங்கிவர அனுப்பி உள்ளார்.

இவர்கள் ஐ வின்ஸ் உணவகத்தில் ரொட்டி, சவர்மா, சிக்கன் ரைஸ், கிரில் சிக்கன் உள்ளிட்டவற்றை பார்சல் வாங்கி வந்து, அவர்களது வீட்டில் உறவினர் கவிதா,56 ஆகியோருடன் சாப்பிட்டுள்ளனர். இதில் 5 பேருக்கும் நேற்று மாலை உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை கலையரசி படுக்கையில் இறந்து கிடந்துள்ளார்.

இதனை அடுத்து நாமக்கல் காவல்துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த 6 மாணவிகள் உள்பட 13 மருத்துவக் கல்லூரி மாணவர்களும் இதே உணவகத்தில் சாப்பிட்டு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு நேற்று மதியம் முதல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நாமக்கல் ஆட்சியர் டாக்டர் உமா, நேற்று அந்த தனியார் உணவகத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு சமைக்க வைக்கப்பட்டிருந்த இறைச்சி, உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, அவை தரமற்ற வகையில் இருப்பதைக் கண்டு உடனடியாக அதனை அப்புறப்படுத்தி உணவகத்திற்குச் சீல் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்து உணவுகளை அப்புறப்படுத்தி உணவகத்திற்குச் சீல் வைத்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் தாயார் சுஜாதா அளித்த புகாரின் பேரில் நாமக்கல் காவல்துறையினர் உணவக உரிமையாளர் நவீன்குமார், சமையல் செய்த ஒடிசாவைச் சேர்ந்த சஞ்சய் மககுத 27, தபாஸ்குமார் 30 ஆகிய 3 பேர் மீது ஐபிசி 273, 328, 304(II) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பாக நாமக்கல் ஆட்சியர் டாக்டர் உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் பேசி விளக்கம் அளித்தனர். அப்போது பேசிய ஆட்சியர் உமா, 'நாமக்கல் தனியார் உணவகத்தில் சாப்பிட்ட பள்ளி மாணவி கலையரசி உயிரிழந்த நிலையில், 5 குழந்தைகள், ஒரு கர்ப்பிணி உள்ளிட்ட 43 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் நலமுடன் உள்ளனர். உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகு மேல்நடவடிக்கை எடுக்கப்படும். உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண், 'நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிகமாக ஷவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட உணவுகள் தயாரிக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் தரமான உணவுப் பொருட்களை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே நாமக்கல்லில் உள்ள உணவகத்தில் ஷவர்மா கிரில் சிக்கன் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் ஆய்வு நடத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

காசு வாங்கிக்கொண்டு உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் தரமான சுவையான உணவுகளை கொடுக்க வேண்டியது கடமை. லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கெட்டுப்போன உணவுகளை கூட விற்பனை செய்து மக்களின் உயிரோடு விளையாடும் உணவகங்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+