முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ்!.. மேலும் கூடுதல் பொறுப்புகள்!
சென்னை: முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என சட்டசபை தேர்தலுக்கு முன்னர் திமுகவால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தொகுதிகளில் வைக்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் தீர்வு காணும் என்பதுதான்.
இந்த நிலையில் தேர்தலில் திமுக வென்றது. ஆட்சியை பிடித்தது. முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற தனித் துறை உருவாக்கப்பட்டு அதற்கு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார். இவர் நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்தவர்.

அங்கன்வாடி
இவர் தனது குழந்தையை நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தினந்தோறும் அவரது குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டும் வருகிறார். நெல்லை மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமை கொண்ட ஷில்பாவின் செயல் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது.

முதல்வர்
இந்த நிலையில் ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுவரை பல மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

அதிகாரி
தற்போது ஷில்பா பிரபாகர் சதீஷ் முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ், முதல்வர் தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

குறை தீர்ப்பு பிரிவு
மேலும், குறை தீர்ப்புப் பிரிவு, மின் ஆளுமை ஆகியவற்றின் சிறப்பு அதிகாரியாகவும் மறு உத்தரவு வரும்வரை ஷில்பா பிரபாகர் சதீஷ் பதவி வகிப்பார். செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அலுவல் சாரா துணை செயலாளருமான வி.பி.ஜெயசீலன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications