பா.ஜ.க.வில் மகனுடன் ஐக்கியமானார் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார்! சிவாஜி ரசிகர் மன்றம் எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவாஜி கணேசனின் மூத்த மகனும், நடிகருமான ராம்குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் ஆகியோர் பா.ஜ.கவில் இன்று இணைந்தனர்.

Recommended Video

    பாஜகவில் இணைந்த சிவாஜியின் மூத்த மகன்… வரவேற்ற எல்.முருகன், சி.டி.ரவி!

    தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில் இருவரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.

    பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜக தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்பதில் சபதம் எடுத்து செயல்பட்டு வருகிறது.

    பாஜக சபதம்

    பாஜக சபதம்

    தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. கூட்டணியை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜக தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்பதில் சபதம் எடுத்து செயல்படுகிறது. இதனால் சினிமா பிரபலங்கள், மக்கள் செல்வாக்கு உள்ள நபர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது.

    சிவாஜி மகன் ராம்குமார்

    சிவாஜி மகன் ராம்குமார்

    நடிகை நமீதா, நடிகர் விஜயகுமார், கஸ்தூரி ராஜா, பொன்னம்பலம், ராதாரவி உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலர் ஏற்கெனவே பாஜகவில் இணைந்துள்ளனர். நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், நடிகருமான ராம்குமாரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதனை உறுதிபடுத்தும் விதமாக நேற்று தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு நேற்று வந்த ராம்குமார் மற்றும் அவரது மகனும், நடிகருமான துஷ்யந்தும் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை சந்தித்து பேசினர்.

    பாஜகவில் இணைந்தார்

    பாஜகவில் இணைந்தார்

    பின்னர் ராம்குமார் நிருபர்களிடம் கூறுகையில், 'நான் பா.ஜ.க.வில் இணைய உள்ளேன். அதற்கு வலிமையான மனிதராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம். நான் பா.ஜ.க.வில் இணைந்து மக்களுக்கு நல்லது செய்வேன்.' என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ராம்குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை சந்தித்து பேசினார்கள். பின்னர் ராம்குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் ஆகியோர் எல்.முருகன் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தனர்.

    சிவாஜிக்கு பெருமை சேர்க்காது

    சிவாஜிக்கு பெருமை சேர்க்காது

    ராம்குமார் பாஜகவில் இணைவது குறித்து சிவாஜி ரசிகர் மன்றத் தலைவரும், காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவருமான சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சித் தலைவராக, காமராஜரின் சீடராக, பக்தராகக் கடைசிவரை வாழ்ந்து மறைந்த சிவாஜியின் புதல்வர், பாஜகவில் இணைவது எந்த வகையிலும் சிவாஜியின் புகழுக்குப் பெருமை சேர்க்காது என குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+