தோண்ட தோண்ட கட்டிலுக்கு அடியில் ஷாக்.. அதே வீட்டில் மகள் எப்படி? 1 வருட மர்மத்துக்கு பள்ளத்தில் விடை
சென்னை: கிரைம் செய்திகள் பெருமளவு இன்று இந்தியாவில் தலைவிரித்தாடுகின்றன.. நேற்றுகூட தெலங்கானா மாநிலத்தில் ஒரு உச்சக்கட்ட கொடுமை நடந்துள்ளது.. செகந்திராபாத் அருகே உள்ள ஜவஹர் நகர் பகுதியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளின் மீதான நம்பிக்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. தனது ரத்தத்தையே பாலாக்கி வளர்த்த அம்மாவை, ஒரு பெண் இப்படியும் செய்வாரா? என்ற ஷாக்கில் போலீசார் உள்ளனர்.. அப்படி என்னதான் நடந்தது?
அஞ்சு எனப்படும் அந்த இளம்தாய், கருத்து மோதல் காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வாழ்பவர்.. ஒரு தனியார் நிறுவனத்தில் கடினமாக உழைத்து தனது 2 மகள்களையும் வளர்த்து வந்துள்ளார்.

கிரைம் நியூஸ்
இந்நிலையில், அஞ்சுவின் 2வது மகளான இஷிகாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மவுன்டியராஜ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆரம்பத்தில் மகளின் காதலை அறிந்த அஞ்சு, அதனை வன்மையாக கண்டித்துள்ளார். ஆனால், அம்மாவின் பேச்சைக் கேட்காத இஷிகா, அஞ்சு இல்லாத நேரங்களில் மவுன்டியராஜை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இதனால் தாய்-மகள் இடையே அடிக்கடி மோதல்கள் வெடித்தன. ஒருகட்டத்தில், "நாம் இருவரும் நிம்மதியாக வாழ வேண்டுமானால் இவள் உயிரோடு இருக்கக்கூடாது" என இஷிகா தனது காதலனிடம் ஒரு பயங்கரத் திட்டத்தை தீட்டியுள்ளார்.
கட்டிலுக்கு அடியில் ஷாக்
அதன்படி, கடந்த வருடம் மே மாதம் ஒரு நாள் இரவு, அஞ்சு தூங்கி கொண்டிருந்தபோது, இஷிகாவும் அவரது காதலன் மவுன்டியராஜும் இணைந்து அஞ்சுவைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டார்கள்..
கொலை செய்த பிறகு உடலை அப்புறப்படுத்துவதில் சிக்கல் வரும் என்று அஞ்சிய மகள், தாங்கள் தூங்கும் அதே படுக்கையறையில், கட்டிலுக்கு அடியில் ஒரு பெரிய பள்ளத்தை தோண்டினார்.. அதில், அஞ்சுவின் உடலை போட்டு புதைத்து மூடினார்.. அதன் பிறகு எதுவுமே தெரியாதது போல் இருந்துவிட்டார்.. இதில் அதைவிட அதிர்ச்சி, அதே பெட்ரூமில்தான் இஷிகா கடந்த 1 வருடமாகவே தங்கி தூங்கி வந்துள்ளார்..
பெட்ரூமில் மகளின் அதிர்ச்சி செயல்
தனது அம்மாவை தேடுவது போல நாடகமாடிய இஷிகாவின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட தொடங்கியது. எனவே இஷிகாவை பிடித்து விசாரித்துள்ளார்.. தொடர் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பேசிய இஷிகாவை போலீசார் துருவித் துருவி விசாரித்தபோதுதான், அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். வட்டாட்சியர் முன்னிலையில் வீட்டின் தரை தோண்டப்பட்டபோது, அழுகிய நிலையில் அஞ்சுவின் உடல் மீட்கப்பட்டது.
பெற்றத் தாயைக் கொன்று, ஓராண்டு காலம் அதே சடலத்தின் மீது கட்டில் போட்டுத் தூங்கிய மகளின் இந்தச் செயல், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இஷிகா மற்றும் அவரது காதலன் மவுன்டியராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
ஒரு வருட மர்மம்
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் தேர்தல் சோதனைகள் ஒருபுறம் நடந்தாலும், மனித நேயமற்ற இத்தகைய குற்றங்கள் மக்களை நிலைகுலைய வைத்து வருகின்றன..
அதிலும், பெற்ற தாய், தனது மகளின் எதிர்காலத்திற்காக பாடுபட்ட நிலையில், அதே மகளின் கையாலேயே கொலை செய்யப்பட்டு, அவர் வாழ்ந்த வீட்டின் படுக்கையறை கட்டிலுக்கு அடியிலேயே புதைக்கப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications