"அடங்காத" மேனகா.. மாமனார், மச்சினன், கணவன்.. இதுல கார் டிரைவர் வேற.. 2020-ஐ அலற வைத்த அயனாவரம்
சென்னையில் கணவன், உட்பட 3 பேரை கொன்றுள்ளார் மேனகா
சென்னை: வரலாற்றை திருப்பி பார்த்தால், பெரும்பாலும் பெண்கள்தான் அங்கு கம்பீரமாக நின்று கொண்டிருப்பார்கள்.. ஆனால், சமீப காலங்களில் அப்படி நிலைமை இல்லை.. கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு சில பெண்கள், உருமாறி நம்மையே மிரட்டி கொண்டிருக்கிறார்கள்.. அப்படி ஒருவர்தான் மேனகா.. இந்த வருடம் மறக்க முடியாத பெண்களுள் இவரும் ஒருவர்!
பெற்ற அப்பாவுடன் சேர்ந்து மாமனார், கணவரை, கணவரின் தம்பி ஆகிய 3 பேரையும் அடித்து கொன்றவர் இந்த மேனகா.. கார் டிரைவருடன் கள்ளக்காதலும் இவருக்கு இருந்துள்ளது... சொந்த மாமியாரையே ஆள் வைத்து கடத்தியவரும்கூட.. இப்படி கொலை, ஆள்கடத்தல், கள்ளக்காதல் என அனைத்தும் கலந்த திகில் கலவைதான் மேனகா என்ற சீரியல் கில்லர்!
சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பையை சேர்ந்தவர் பத்மினி. 70 வயதான இவருக்கு, செந்தில், ராஜு என, 2 மகன்கள் உள்ளனர். 2 மகன்களுக்கும் கல்யாணமாகி தனித்தனியே படப்பையில் வசித்து வந்தனர். ஆனால், சொத்து சம்பந்தமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு வந்தது.

சுப்பராயன்
மறைந்த அதிமுக பிரமுகர் சுப்பராயனின் மனைவிதான் பத்மினி. இவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் 10க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. மூத்த மகன் செந்தில்குமார் பில்டிங் கான்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார்.. இவருக்கும் இவரது தம்பி ராஜ்குமாருக்கும் சுப்பராயன் அப்போது சொத்துக்களை பாகம் பிரித்து தந்துள்ளார்.. இதில், ராஜ்குமாருக்கு கொஞ்சம் கூடுதலாக சொத்துக்களை தந்துவிட்டார்.. அதனால் செந்தில்குமாரும் அவரது மனைவி மேனகாவும் ஷாக் அடைந்தனர்.

அப்பாவி கணவன்
உடனே தன்னுடைய கார் டிரைவர் ராஜேஷ் கண்ணன் என்பவருடன் சேர்ந்து ராஜ்குமாரை கொல்ல முடிவெடுத்தார் மேனகா.. இதற்கு கணவனையும் உடந்தையாக்கினார்.. கடைசியில் மேனகாவும், கார் டிரைவரும் எஸ்கேப் ஆகிவிட, அப்பாவி கணவன் செந்தில்குமார் ஜெயிலுக்கு போய்விட்டார்.. இந்த சமயத்தில் மேனகாவுக்கு காமலீலைகள் தாண்டவமாடின.

கள்ளக்காதல்
கார் டிரைவர் ராஜேஷ் கண்ணாவுடன் கள்ள உறவு மேலும் தொடர்ந்தது... தண்டனை முடிந்து வெளியே வந்த செந்தில்குமார், மேனகாவின் செயலை கண்டு உடைந்து போனார்.. தட்டிக்கட்டார்.. ஆனால், கள்ளக்காதலுக்கு கணவன் தடையாக வந்ததால், அவரையும் இதே கார் டிரைவருடன் சேர்ந்து கொலை செய்ய பிளான் செய்தார். அதன்படி கடந்து 2018, பிப்ரவரி மாதம் செந்தில்குமாரை, செஞ்சியை அடுத்துள்ள பசுமலை தாங்கல் என்ற இடத்துக்கு வரவழைத்து கொடூரமாக கொன்று, அங்கேயே புதைத்தார்.

மேனகா
ஆனால் இத்தனை கொலைகளையும் செய்தபிறகுதான், மாமனார் இருக்கும்வரை சொத்து கிடைக்காது என்ற விஷயமே மேனகாவுக்கு தெரிந்தது.. அதனால் அடுத்த குறியை மாமனாருக்கு வைத்தார்.. இதற்கும் கள்ளக்காதலனை துணைக்கு வைத்து கொண்டு, தன்னுடைய அப்பா அருணையும் பணத்தாசை காட்டி சேர்ந்து கொண்டு, மாமனாரையும் கொன்று புதைத்தார். ஆனால், மாமனாரையும் கொலை செய்த பிறகுதான் தெரிந்தது, மாமியார் பத்மினியை கடத்தினால்தான் முழு சொத்தும் கைக்கு வரும் என்று...!

கடத்தல்
அதனால், கடந்த 2018-ல் மாமியார் பத்மினியை கடத்தி கொண்டு போய் ஒரு காட்டுப் பகுதியில் அடைத்து வைத்தார் மேனகா.. அந்த 2 நாளும் மாமியாருக்கு சாப்பாடும் தரவில்லை.. ஏதேதோ பத்திரங்களை காட்டி கையெழுத்து போடும்படி மிரட்டி உள்ளார்.. அதற்குள் இந்த கடத்தல் விஷயம் அயனாவரம் போலீசுக்கு தெரிந்து, சிசிடிவி கேமரா உதவியுடன் பத்மினியை மீட்டனர்... அப்போதுதான், பத்மினி தனது மகன் காணவில்லை என்று ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

சடலம்
நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மணிமங்கலம் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அதில் கார் டிரைவர் ராஜேஷ் கண்ணா சிக்கினார்.. பல கொலைகளை மேனகாவுடன் சேர்ந்து செய்ததையும் ஒப்புக் கொண்டார்.. புதைக்கப்பட்ட செந்தில்குமாரின் சடலமும் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த கொலைக்கு உதவியாக இருந்த ஹரிகிருஷ்ணன், அன்பு, உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்..

மேனகா எங்கே?
இறுதியில், இந்த வழக்கில் மேனகாவின் அப்பா அருண் சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டார்.. ராஜேஷ்கண்ணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.. ஆனால் கொடுமை என்னவென்றால், எல்லா கொலைகளுக்கும் காரணமான சீரியல் கில்லர் மேனகாவை காணோமாம்.. அவர் எங்கே என்றே தெரியவில்லை.. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று சில தினங்களுக்கு முன்பு செய்தி வந்தது.. எனினும், மேனகா கைதாவாரா? ஜெயிலுக்கு போவாரா? தண்டனையை அனுபவிப்பாரா? என்று தெரியவில்லை.. ஆனால், இந்த வருடம் பொதுமக்களை வெலவெலக்க வைத்த பெண்களில் மேனகாவும் ஒருவர்!
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications