Pamban: பாம்பன் அருகே கடலுக்குள் விடிய விடிய இருந்த வங்கி ஊழியர்! கடவுளாக வந்த மீனவர்கள்.. விசாரித்தால் ஷாக்
சென்னை: பாம்பனில் புதிய பாலம் சமீபத்தில்தான் திறக்கப்பட்டது. இந்த பாலத்தில் ரயில் செல்லும் போது கடலின் அழகை பார்க்க ஏராளமான பயணிகள் ஆர்வமிகுதியில் படிக்கட்டுகளில் முண்டியடிப்பதை பார்க்க முடிகிறது. அப்படி ரயிலின் படிக்கட்டு அருகே நின்றபடி பயணித்த பயணி ஒருவர் திடீரென தவறி கடலுக்குள் விழுந்துள்ளார். இதில் நீச்சல் அடித்த் அந்த நபர் கீழே பாறை ஒன்றை பிடித்து அதில் ஏறி விடிய விடிய அங்கேயே இருந்துள்ளார்.
மதுரை பரவை பகுதியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 28). இவர் மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள வங்கி ஒன்றில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் வரதராஜ் ரயிலில் சென்றார். பின்னர் அன்று மாலை 6 மணி அளவில் ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு புறப்பட்ட பயணிகள் ரயிலில் ஏறினார்.

பாம்பன் ரயில் பாலம்
இந்த ரயில் பாம்பன் கடலின் நடுவே புதிய ரயில் பாலத்தில் சென்று கொண்டிருந்தது. பாம்பன் ரயில் நிலையத்தில் கடல் அழகை பார்க்கும் ஆர்வத்தில் வரதராஜ் ரயில் படிக்கட்டு அருகே நின்றுகொண்டு வேடிக்கை பார்த்தபடி பயணித்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு தவறி கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
விடிய விடிய கடலுக்குள் தவித்த வரதராஜ்
கடலில் விழுந்து உயிருக்கு போராடிய நபர், பாலத்தின் தூண் அருகில் இருந்த பாறையை லாவகமாக இறுக்கிப் பிடித்துக்கொண்டார். எப்படியோ பாறையின் மீது ஏறிவிட்டார். ஆனால், பாறையில் இளைஞர் ஒருவர் இருப்பதை யாரும் கவனிக்கவில்லை. இதனால், உயிரை கையில் பிடித்துக்கொண்டு விடிய விடிய அந்த பாறையில் இருந்துள்ளார் வரதராஜ்.
யாராவது நம்மை காப்பாற்ற வருவார்களா என்று இரவு முழுக்க பரிதவித்து இருக்கிறார் வரதராஜ். இந்த நிலையில், அதிகாலையில் அந்த வழியாக மீன்பிடிக்க படகுகளில் மீனவர்கள் வந்திருக்கிறார்கள். அப்போது கடலுக்குள் பாறையில் ஒருவர் இருப்பதை கண்டு ஷாக் ஆனார்கள். உடனடியாக வரதராஜை பத்திரமாக மீட்ட மீனவர்கள், அவரிடம் விவரங்களை கேட்டு இருக்கிறார்கள்.
அறிவுறை கூறி அனுப்பிய போலீசார்
பின்னர் ரயில் பாலத்தின் மீது ஏற்றி வரதராஜை பத்திரமாக அனுப்பி வைத்தனர். விடிய விடிய கடலுக்குள் பாறையில் இருந்த வரதராஜ், தூக்கக் கலக்கத்தில் களைப்பு அடைந்தபடி ரயில் பாலம் வழியாக நடந்து வந்துள்ளார். அவரை பார்த்த ரயில்வே போலீசார் உடனடியாக மீட்டு விசாரித்துள்ளனர். தொடர்ந்து வரதராஜ் உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.
உறவினர்கள் அங்கு வந்ததும் வரதராஜை அவர்களிடம் ஒப்படைத்தனர். ரயிலில் இருந்து தவறி கடலில் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ரயிலில் பயணம் செய்யும் போது படிக்கட்டில் இருந்து பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வரதராஜை போலீசார் அனுப்பி வைத்தனர்.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
பாம்பனில் புதிய பாலம் சமீபத்தில்தான் திறக்கப்பட்டது. இந்த பாலத்தில் ரயில் செல்லும் போது கடலின் அழகை பார்க்க ஏராளமான பயணிகள் ஆர்வமிகுதியில் படிக்கட்டுகளில் முண்டியடிப்பதை பார்க்க முடிகிறது. செல்ஃபி வீடியோ எடுப்பது, ரீல்ஸ்களுக்காக வீடியோ எடுப்பது என ஆபத்தை உணராமல் விபரீத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
கடல் மேல் செல்லும் பாலத்தில் ரயில் செல்கிறது என்ற விபரீதத்தை அறியாமல் பயணிகள் சிலர் படிக்கட்டுகளில் பயணிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே, இது போன்ற நிகழ்வுகளை தடுக்க ரயில்வே அதிகாரிகள் பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications