நாட்டு வெடிகுண்டு வீசி.. ஓட ஓட வெட்டி.. பாஜக நிர்வாகி படுகொலை.. சென்னை பூந்தமல்லி அருகே பயங்கரம்
சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி ஓட ஓட விரட்டி வெட்டி படு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தவர் பிபிஜி சங்கர். இவர் பாஜக எஸ்சி - எஸ்டி பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று சங்கர் தனது காரில் சென்னைக்கு சென்றார். தொடர்ந்து நேற்று இரவு சென்னையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நசரத் பேட்டை சிக்னலில் சங்கர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் ஒன்று திடீரென சங்கரின் காரை வழிமறித்து அந்த கார் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கர் காரை நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கி ஓடினார். எனினும் அந்த கும்பல் தொடர்ந்து விடாமல் துரத்திச்சென்று ஓட ஓட வெட்டியுள்ளது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் நசரத் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கரின் உடலை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சங்கர் மீது சுமார் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பாஜக நிர்வாகி ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொல்லப்பட்ட இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications