Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் இப்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஒருவித தட்டுப்பாடு நிலவி கொண்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.. இத்தகைய சூழலில், உங்கள் வீட்டிற்கு சிலிண்டரை தடையின்றி பெறுவதற்கு சரியான முறையில் முன்பதிவு செய்வது மற்றும் அரசு அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை பின்பற்றுவது மிக மிக முக்கியமாகும். அந்தவகையில் சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

இப்போதல்லாம் சமையல் கேஸ் புக்கிங் செய்வதற்கு நிறைய டிஜிட்டல் வழிகள் வந்துவிட்டன.. போன் கால், எஸ்எம்எஸ், ஆன்லைன் போர்டல், செல்போன் ஆப், வாட்ஸ்அப் என இப்படி ஏகப்பட்ட வசதிகள் இருந்தாலும், பலருக்கு இன்னும் சரியான எண்கள் மற்றும் முறைகள் தெரிவதில்லை.

LPG Cylinder Booking

எல்பிஜி சமையல் சிலிண்டர்

முதலாவதாக, முன்பதிவு எண்களை தெரிந்துகொள்வோம்.. இண்டேன் கேஸ் (Indane Gas) வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண்ணின் மூலம் வாட்ஸ்அப் வழியாகவோ அல்லது அழைப்பு மூலமாகவோ சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்..

ஒருவேளை நீங்கள் ஹெச்பி கேஸ் (HP Gas) வாடிக்கையாளராக இருந்தால், 92222 01122 என்ற எண் மூலம் சிலிண்டரை எளிதாக முன்பதிவு செய்யலாம்.. அதேபோல பாரத் பெட்ரோலியம் (Bharat Petroleum) சிலிண்டர் வாடிக்கையாளராக இருந்தால், 1800224344 என்ற எண்ணிற்கு "Hi" என்று ஒரு மெசேஜ் அனுப்பினாலே உங்கள் சிலிண்டர் பதிவு செய்யப்பட்டுவிடும்..

சமையல் கேஸ் புக்கிங்

இவற்றுடன் சேர்த்து பேடிஎம் (Paytm), போன்பே (PhonePe), கூகுள் பே (Google Pay) போன்ற செயலிகள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.. கிரெடிட் கார்டு மூலம் முன்பதிவு செய்ய விரும்புவோர் அந்தந்தத் தளங்களில் உள்ள சலுகைகளைச் சரிபார்த்துப் பயன்பெறலாம்.. முக்கியமாக, உங்கள் மொபைல் எண் ஏஜென்சியில் சரியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது அவசியம்..

அடுத்ததாக, பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் விஷயம் கேஸ் இணைப்பின் பெயர் மாற்றமாகும்.. கேஸ் இணைப்பு யாருடைய பெயரில் இருக்கிறதோ, அவர் ஒருவேளை ஆணாக இருந்தால், அவரிடம் இருந்து அந்தப் பெயரை மாற்றுவதற்கு "ஆட்சேபனை இல்லா சான்றிதழ்" பெற வேண்டும்..

பெயர் மாற்றம் என்ன

அவர் கல்யாணமான பெண்ணாக இருந்தால், அவரது மகள் மற்றும் கணவர் ஆகிய 2 பேரிடமிருந்தும் உங்கள் பெயருக்கு மாற்ற ஆட்சேபனை இல்லாத சான்றிதழை தனித்தனியாக பெற்றுக்கொள்ள வேண்டும்.. இந்த சான்றிதழை உங்கள் குடும்ப அட்டையின் நகலுடன் சேர்த்து, உங்கள் கேஸ் விநியோகஸ்தர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன் பிறகு, விநியோகஸ்தர் அலுவலக ஊழியர்கள் உங்கள் வீட்டிற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.. உங்கள் பெயரிலோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு ஏதேனும் கேஸ் இணைப்பு உள்ளதா என்பதை அவர்கள் உறுதி செய்வார்கள்.. இதில் எந்த பிரச்சனையும் இல்லையென்றால் கேஸ் கனெக்‌ஷன் உங்கள் பெயருக்கு மாற்றப்படும்..

ஆனால், புதிய பெயர் மாற்றம் நடைமுறைக்கு வரும் வரை சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

இறப்பு சான்றிதழ் - பெயர் நடைமுறை

ஒருவேளை கேஸ் இணைப்பு யாருடைய பெயரில் இருக்கிறதோ, அவர் இறந்துவிட்டால், அவரது இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் ஆகிய 2 சர்ட்டிபிகேட்டின் நகல்களையும் கேஸ் ஏஜென்சியில் சமர்ப்பிக்க வேண்டும்..

இவ்வளவு நடைமுறைகள் இருந்தாலும், சமீபத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு தடை

அதன்படி, அனைத்து வீட்டு உபயோக எல்பிஜி நுகர்வோரும் eKYC எனப்படும் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை கட்டாயம் செய்ய வேண்டும்.. இதை Aadhaar FaceRD ஆப் மூலமாகவோ அல்லது உங்கள் கேஸ் நிறுவனத்தின் செயலி மூலமாகவோ வீட்டிலிருந்தே செய்து கொள்ளலாம். கேஸ் டீலர்கள் இதற்கான உதவிகளை கண்டிப்பாக செய்வார்கள்.

இத்தகைய விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் மட்டுமே சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் காலத்திலும் எந்தவிதமான சிக்கலுமின்றி கேஸ் இணைப்பை பெறலாம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+