நியாய விலை கடைக்கு.. புது ரேஷன் கார்டோடு போனவர்கள் ஸ்டன் ஆகி நிற்க.. பெரிய ஷாக்.. போச்சு
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் சென்று பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு ஷாக் செய்தி வந்துள்ளதாம். எல்லோருக்கும் இல்லை.. குறிப்பிட்ட சிலருக்கும் மட்டும் ஷாக் செய்தி ஒன்று சென்றுள்ளதாம்.
தமிழ்நாட்டில் புதிதாக திருமணம் ஆனவர்கள், புதிதாக குடியேறியவர்கள், தனி வீடு பிரிந்தவர்கள் பலர் ரேஷன் கார்டுகளை வாங்க தொடங்கி உள்ளனர். இப்படி ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பித்தவர்கள் ஒருவர் இருவர் இல்லை. மொத்தமாக 2.80 லட்சம் பேர்.

இவர்கள் விண்ணப்பங்களை மேற்கொண்டு 1 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுக்கப்படாமல் போனதற்கு காரணம் லோக்சபா தேர்தல். லோக்சபா தேர்தல் விதிகள் காரணமாக ரேஷன் கார்டுகளை கொடுக்க முடியவில்லை. அதன் சரிபார்ப்பு பணிகளை செய்ய முடியவில்லை.
இப்போது அதெல்லாம் முடிந்து ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுகின்றன. ஆனாலும் இன்னும் பலருக்கு ரேஷன் கார்டுகளை வழங்கவில்லை.. புதிய விண்ணப்பங்களை ஆய்வு செய்யவில்லை என்று புகார்கள் உள்ளன.
ஷாக் செய்தி: இப்படிப்பட்ட நிலையில்தான்.. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் சென்று பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு ஷாக் செய்தி வந்துள்ளதாம். எல்லோருக்கும் இல்லை.. குறிப்பிட்ட சிலருக்கும் மட்டும் ஷாக் செய்தி ஒன்று சென்றுள்ளதாம்.
அதன்படி ரேஷன் கடைகளில் தற்போது வரை விண்ணப்பித்த 2.80 லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இந்த 80 ஆயிரம் பேருக்கு இன்னும் ரேஷன் பொருட்களும் வழங்கப்படவில்லையாம்.
அதாவது இவர்கள் ரேஷன் கடைகளில் சென்று பொருட்கள் கேட்டால் ரேஷன் இல்லை என்று கடைகளில் சொல்லப்படுகிறதாம். இதற்கு காரணம் உள்ளது. ரேஷன் கடைகளில் யாருக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என்று லிஸ்ட் இருக்கும்.
அந்த லிஸ்டில் இவர்கள் பெயர் இல்லை. காரணம் இவர்கள் பெயர் கொண்ட லிஸ்ட் இன்னும் கொடுக்கப்படவில்லை. அடுத்த மாதம்தான் இவர்கள் பெயர் கொண்ட லிஸ்ட் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும்.
இதனால் ரேஷன் கடைகளில் பொருட்களை அவர்களால் வாங்க முடியவில்லை. கடைகளுக்கு பொருட்களை வாங்க சென்றால்.. உங்கள் பெயர் இல்லை. அதனால் இந்த மாதம் கொடுக்க முடியாது. அடுத்த மாதம் பெயர் வந்துவிடும். புதிய லிஸ்ட் தயாராகிறது அப்போது கொடுப்போம் என்று பதில் அளிக்கிறார்களாம்.
புதிய ரேஷன் கார்டு: ரேஷன் கடைகளில் தற்போது வரை விண்ணப்பித்த 2.80 லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
மீதம் உள்ள 2 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும். இதற்காக ஸ்மார்ட் கார்டு அச்சடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. புதிய ரேஷன் கார்டுகளை வழங்க இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. நவம்பர் முதல் வாரத்திற்குள் பெரும்பாலும் விடுபட்ட நபர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு விடும் என்று தகவல்கள் வருகின்றன.
ஆனால் அவர்களும் உடனே ரேஷனில் பொருட்களை வாங்க முடியாது. அவர்களுக்கான புதிய லிஸ்ட் தயாரான பின்பே ரேஷனில் பொருட்கள் வாங்க முடியும் என்று ரேஷன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications