சோழிங்கநல்லூர் "மாமியார்".. இந்த வயதிலா? ஆனாலும் முத்துவுக்கு இம்புட்டு கோபம் ஆகாது.. கீழே உருண்ட தலை
சென்னை: ஆட்டை வெட்டுவது போல, கழுத்தை அறுத்துள்ளார் முத்து.. இவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்து... இவர் கூலி வேலை செய்து வருபவர்... இவருக்கு சரசு, புண்ணியவதி என்று 2 மனைவிகள் இருக்கிறார்கள்..

4 பிள்ளைகள்: இவர்களில் முதல் மனைவி சரசுவுக்கு ஒரு மகனும், இரண்டாவது மனைவி புண்ணியவதிக்கு, ரமேஷ், ரஞ்சித், மகாலட்சுமி, இந்திரா என்று 4 பிள்ளைகளும் உள்ளனர். புண்ணியவதி சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்..
புண்ணியவதியின் மகளான மகாலட்சுமிக்கு திருமணமாகிவிட்டது.. இந்த மகாலட்சுமியின் கணவர் ஜெயராஜுக்கும் தன்னுடைய மனைவி புண்ணியவதிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக முத்துவுக்கு சந்தேகம் எழுந்தது. அதாவது, மாமியார் - மருமகனுக்கும் இடையே கள்ள உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு, அது தொடர்பாக புண்ணியவதியிடமும் தகராறும் செய்து வந்துள்ளார்..
முத்து - புண்ணியவதி இடையே அடிக்கடி வாக்குவாதமும், சண்டையும் தினமும் வந்துபோயுள்ளது.. அப்படித்தான் நேற்றும் தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.. வாக்குவாதம் முற்றி கைகலைப்பும் வந்துவிட்டது.. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முத்து, இளநீர் சீவும் அரிவாளால் புண்ணியவதி கழுத்தை அறுத்து வீசினார்..
மகள் சந்திரா: இதைப்பார்த்து பதறியடித்து கொண்டு அவரது மகள் சந்திரா ஓடிவந்தார்.. அவரையும் அரிவாளால் வெட்ட முயன்றார்.. இதில் சந்திராவுக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. புண்ணியவதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மனைவி உயிரிழந்ததை கண்ணால் பார்த்ததுமே, முத்து பயந்துபோனார்.. உடனே அங்கிருந்து தப்பிஓடினார்..
வெட்டுக்காயங்களுடன் கீழே விழுந்த சந்திராவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சந்திராவுக்கு 11 தையல்கள் போடப்பட்டு, தொடர்ந்து சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது. தகவலறிந்த செம்மஞ்சேரி பகுதி போலீசார், விரைந்து வந்து புண்ணியவதியின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
தலைமறைவு: பிறகு வழக்கு பதிவு செய்து, புண்ணியவதியை கொலை செய்த, முத்துவை கண்டுபிடிக்க முயன்றார்.. ஆனால், எந்த க்ளூவும் கிடைக்காததால், சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அனைத்தையுமே ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் முத்து சிக்கினார்.. இதையடுத்து, விரைந்து சென்று முத்துவை கைது செய்த போலீசார், கொலை குறித்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
புண்ணியவதிக்கு 46 வயதாகிறதாம்.. இந்த வயதில் இப்படி சந்தேகப்பட வேண்டாம் என்று புண்ணியவதி முத்துவிடம் சொல்வாராம்.. ஆனாலும், முத்து யார் சொல்லியும் கேட்காமல், தொடர்ந்து மனைவியை டார்ச்சர் செய்து வந்ததாக தெரிகிறது.. தொடர்ந்து முத்துவை போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications