10 ஆண்டாக மூர்மார்க்கெட்டில் வியாபாரிகள் அட்டகாசம்.. சிஎம் ஸ்பெஷல் செல்லுக்கு டைரக்டாக போன புகார்
சென்னை: சென்னை மூர்மார்க்கெட்டில் அல்லிகுள வணிக வளாகத்தில் நீண்ட காலமாக அகற்றப்படாமல் உள்ள குப்பையை அகற்றக் கோரியும் பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் அங்குள்ள கடைக்காரர் ஆறுமுகம் தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து ஆறுமுகம் தனது புகார் மனுவில் கூறுகையில் கடந்த 15 ஆண்டு காலமாக அல்லிகுள வணிக வளாகத்தில் வியாபாரம் செய்து வருகிறேன். வணிக வளாக நுழைவு பகுதியின் இருபுறமும் பொதுமக்கள் வரும் வழியை அடைத்து தள்ளுவண்டியிலும் தட்டுபலகை அடித்தும் உணவு மற்றும் பழைய பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் அங்கேயே குளிப்பதும், துணி துவைப்பதும் சமையல் செய்தும் வருகிறார்கள். தட்டி கேட்பவர்களிடம் கும்பலாக சேர்ந்து தகராறு செய்து வருகிறார்கள்.

நடவடிக்கை இல்லை
இதுகுறித்து மண்டல அதிகாரிகளிடம் 10 ஆண்டுகளாக நேரிலும் எழுத்து பூர்வமாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் முறையாக அனுமதி பெற்று வியாபாரம் செய்ய முடியாமலும் மாநகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தாமல் கஷ்டப்படுகிறேன். இதனால் கடையை நிரந்தரமாக திறப்பதற்கும் யோசிக்க வேண்டிய நிலை உள்ளது.

அல்லிகுளம்
இது ஒரு புறம் என்றால் அல்லிகுள வணிக வளாகத்தில் உள்ளேயும் குடும்பம் நடத்துகிறார்கள், அல்லிகுள வணிக வளாகத்தை ஒட்டி மைலேடிஸ் பூங்கா செல்லும் வழியில் இருபுறமும் மாநகராட்சி நடைபாதை கடைகளை ஒதுக்கியுள்ளது.

கண்ணகி நகரில் வீடு
வசிப்பதற்கும் கண்ணகி நகரில் வீடும் ஒதுக்கியுள்ளது. அவர்கள் அங்கு குடிபெயராமல் இங்கேயே குடும்பம் நடத்துகிறார்கள். இவர்களின் பிடியில் அல்லிகுள வணிக வளாகம் சிக்கி சீரழிந்துள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோத செயல் நடைபெறும் கூடாரமாக திகழ்கிறது. கஞ்சா போதை ஆசாமிகளின் புகலிடமாகவும் உள்ளது.

மதுபாட்டில்கள்
வணிக வளாகத்தின் உள்ளே திரும்பும் இடமெல்லாம் மதுபாட்டில்களின் குப்பையும், மலம் ஜலம் கழிக்கும் இடமாகவும் உள்ளது. பாலியல் தொல்லை தரும் திருநங்கைகளின் அட்டகாசம் நிறைய உள்ளது. இது எல்லாம் தெரிந்தும் மண்டல அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை.

தங்க அனுமதி வேண்டாம்
இரவு 8 மணிக்கு மேல் அங்கே தங்குவதற்கு அனுமதி அளிக்காமல் இரும்பு கரம் கொண்டு அடக்குமாறும் தங்களின் நீண்ட நாள் கனவான சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கான முதல் நடவடிக்கையை இங்கிருந்து ஆரம்பித்தாலே சென்னை அழகுபட்டுவிடும். இத்துடன் தாங்கள் நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என அந்த மனுவில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications