பொறுத்து பொறுத்து பார்த்த வியாபாரிகள்.. ஓவர் மக்கள் கூட்டம்.. 4 நாள் கடையடைப்பு.. திடீர் அறிவிப்பு
திருக்கழுக்குன்றம் வியாபாரிகள் 4 நாட்கள் கடைகளை மூட முடிவு
செங்கல்பட்டு: பொறுத்து பொறுத்து பார்த்தார்கள் கடை வியாபாரிகள்.. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.. அதனால் 4 நாட்களுக்கு கடைகளை அடைத்துவிடுவது என செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள் முடிவெடுத்துவிட்டனர்..!
தமிழகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.. இதற்காக முழு லாக்டவுனும் போடப்பட்டுள்ளது.. அத்துடன், அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் கடைகள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பலரும் இதை காதில் வாங்காமல் தேவையில்லாமல் வெளியில் நடமாடி கொண்டிருக்கிறார்கள்.. இவர்களை எல்லாம் மடக்கி பிடித்து நம் போலீசாரும் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.

நேரம்
கடைகளை திறந்து வைத்திருக்கும் நேரத்தை வகுத்திருந்தாலும், இந்த குறிப்பிட்ட நேரத்திலும் மக்கள் நிறைய கூடுகிறார்கள்.. இதனால், கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது... எல்லாரும் மாஸ்க் போட்டிருக்கிறார்கள், ஆனால் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில்லை..

முடிவு
பொதுவாக, கடைகள் அனைத்துமே சிறியதாக இருப்பதால், அதற்குள் சரீர இடைவெளியை பின்பற்றுவது கடினம்தான் என்றாலும், ஒருவர் பின் ஒருவராக சென்று பொருட்களை வாங்கலாம்.. ஆனால், நம் மக்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் குவிந்துவிடுகிறார்கள். இப்போதைக்கு கடைகள்தான் கொரோனாவை பரப்பும் இடங்களாக மாறி கொண்டிருக்கின்றன.

பரவல்
இப்படிப்பட்ட சூழலில்தான் செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள் சேர்ந்து ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.. பொதுமக்களின் நலன் கருதி, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும், அரசுக்கு ஒத்துழைப்பு தரும் விதமாகவும் இன்று முதல் வரும் 22ம் தேதி வரை அதாவது 3 நாட்களுக்கு அனைத்து கடைகளும் மூடப்படும் என்று திருக்கழுக்குன்றத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

4 நாட்கள்
இன்று முதல் 3 நாட்கள் என்றால், 4வது நாள் ஞாயிற்றுக்கிழமை.. அன்றைய தினம் லாக்டவுன் என்பதால், மொத்தம் 4 நாட்களுக்கு கடை மூடப்பட்டிருக்கும்.. தொற்று இவ்வளவு வீரியமாக பரவி கொண்டிருப்பது தெரிந்தும், கட்டுப்பாடின்றி நம் மக்கள் கடைகளில் குவிந்து விடுவதால், 4 நாளைக்கு கடையை மூடிவிட வியாபாரிகள் முடிவு எடுத்துவிட்டனர்..

விழிப்புணர்வு
இந்த மாதிரியான ஒரு முடிவை, அடுத்தடுத்த மாவட்டங்களிலும் கடைக்காரர்கள் ஒன்றுசேர்ந்து எடுத்துவிட்டால், நமக்குதான் சிக்கல்.. எனவே, இனியாவது தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும்..!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications