3 மாநகராட்சிகளில் கடைகள் இன்று மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5மணி வரை திறந்திருக்கும்
சென்னை: சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் இன்று மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 வரை கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் மே 1ம் தேதி முதல் வழக்கமான நேரமாக பிற்பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழக அரசு நேற்று இது தொர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சி பகுதிகளில் அமலில் இருந்த முழு ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், வியாழக்கிழமை முதல் ஏற்கனவே இருந்த ஊரடங்கு நிலையே தொடரும்.

ஆனால் இன்று மட்டும் பொதுமக்கள் அத்தியாவசியப்பொருட்களான காய்கறி, பழங்கள், மளிகைப்பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக அவற்றை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும்.
வரும் மே1ம் தேதி முதல் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.
கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு எளிதாகவும், அதிதீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய்தொற்றாகும். அத்தியாவசிய பொருட்களை வாங்க அவசரம் காட்டமால் , பொறுமை காத்து, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடித்து முகக் கவசம் அணிந்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications