தமிழகத்தில் இன்று ஹோட்டல்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள் இயங்காது.. ஏன் என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மதுரையில் இன்று மாநாடு நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் இன்று கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மே 5 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41 ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரையில் ஒன்று கூடுகிறார்கள்.

shops shopping malls hotels will not be functioning today in Tamilnadu

இந்த நிலையில் மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடக்கும் இந்த மாநாட்டில் வணிகர் சந்திக்கும் பிரச்சினைகள், வணிகர்கள் மீதான அத்துமீறலுக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து தீர்மானம் கொண்டு வரப்படும் என தெரிகிறது.

சப்ளை செயின் விற்பனையாளர்களால் சாமானிய வணிகர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் உருவாக்கவும் தீர்மானம் நிறைவேற்றி இந்த தீர்மானங்களை அரசு பரிசீலிக்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+