Madhampatti Rangaraj: "உங்கள் கணவரை அபகரிக்க சதி செய்வாங்க! விடாதீங்க!" ஸ்ருதி ரங்கராஜ் போஸ்ட்
சென்னை: வெளியில் இருந்து சித்துவிளையாட்டுகளை விளையாடி உங்கள் கணவரை பறித்து, உங்கள் ஸ்தானத்தை அபகரிக்க வரும் போது விட்டுக் கொடுத்துவிடாதீர்கள் என மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் யார் பெயரையும் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது: இத்தனை கடினமான காலத்திலும் என் மீது கருணை காட்டியவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டவளாக இருப்பேன்.
நானும் எனது மகன்களும் பட்ட போராட்டங்களை அறியாமல் எங்களை விமர்சிப்போருக்கு மரியாதையாக பதில் அளிக்க வேண்டும் என்பதை எனது முதிர்ச்சி எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது.
எல்லா குடும்பத்திலும் பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சினைகள் உள்ளே இருந்தும் வரும், வெளியே இருந்தும் வரும். பிரச்சினை எப்படி வந்தாலும் அதை சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஒற்றுமையே பலம்!
வெளியில் இருந்து யாராவது வந்து சித்து விளையாட்டுகளை விளையாடி, சட்டப்படி மனைவியாக இருக்கும் உங்களை வெளியேற்றும் போது ஒரு போதும் விட்டுத்தராதீர்கள், துவண்டு போவாதீர்கள். உங்கள் கணவருக்காக போராடும் அனைத்து மனைவிகளுக்கும் என் ஆதரவு எப்போதும் உண்டு. இவ்வாறு ஸ்ருதி, யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.
ஸ்ருதியின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் வரவேற்பையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். உங்கள் கணவர் எந்த தவறுகளை செய்தாலும் அதை மறைத்துவிட்டு நியாயம் கேட்கும் நபர்களை ஏன் பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்புகிறார்கள்.
நீங்களும் மாதம்பட்டி ரங்கராஜும் பல ஆண்டுகளாக பிரிந்திருக்கிறீர்கள். உங்களுக்கு எல்லாமும் தெரியும். ஆனால் எதுவும் தெரியாதது போல் பேசுகிறார் என்கிறார் இன்னொரு நெட்டிசன். "சித்து விளையாட்டுகளை உங்கள் கணவர் விளையாடியுள்ளார். அவரை கண்டியுங்கள்" என வேறொரு நெட்டிசன் விமர்சித்துள்ளார்.
இப்படியிருக்க, மனவலிமையாக இருங்கள். பொறுமை எப்போதும் வெல்லும், உங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருங்கள். எதிர்மறை கருத்துகளை புறக்கணியுங்கள். நீங்கள் எந்த தவறையும் செய்யவில்லை, அதனால் உங்களுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் தேவையில்லை என்று ஸ்ருதிக்கு ஆதரவாக ஒருவர் கமென்ட் போட்டிருக்கிறார்.
அது போல் கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும், எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், மன்னிப்பதே சிறந்த தண்டனை என இன்னொருவர் தெரிவித்துள்ளார்.
ஆடைவடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, தன்னை மாதம்பட்டி ரங்கராஜ், திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு தற்போது தன்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார். அவர் என்னுடன் எப்போதும் போல் சேர்ந்து வாழ வேண்டும் என மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் குறித்து ஜாயிடம் மகளிர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர். மேலும் மாதம்பட்டி ரங்கராஜு்கு சம்மன் அனுப்பினர். அவர் தனது மனைவி ஸ்ருதியுடன் வந்து ஆஜரானார். ஜாய் கிரிஸில்டா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். ரங்கராஜ் தனது மனைவியை விவாகரத்து செய்ய கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறினார். அதனால்தான் தானும் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 4 ஆண்டுகளாக மாதம்பட்டி ரங்கராஜுடன் குடித்தனம் நடத்தியதாகவும் ஜாய் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் தான் அவருடன் பேச முயன்ற போது தன்னை கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் மாதம்பட்டி ரங்கராஜ் பழகிய ஆதாரங்களை எல்லாம் இன்ஸ்டா பக்கங்களில் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார் ஜாய் கிரிஸில்டா!












Click it and Unblock the Notifications