கோயம்பேட்டில் "55" ரெடி.. இன்று சுபமுகூர்த்தம்.. சென்னையிலிருந்து ஊருக்கு கிளம்பியாச்சா? இது பாருங்க
சென்னை: தொடர் விடுமுறை காரணமாக சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ள நிலையில், முன்பதிவு குறித்த தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
கோடை விடுமுறை துவங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோடைவாசஸ்தலங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.. மேலும், இன்று 3ம் தேதியும், நாளை மறுநாள் 5-ந்தேதியும் சுபமுகூர்த்த நாட்களாக இருப்பதால் வெளியூர் பயணங்கள் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக சென்னையிலிருந்து, தமிழகத்தின் பிற ஊர்களுக்கு ஸ்பெஷல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, "கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் 290 பஸ்களும், நாளை 4ந்தேதி முதல் 365 பஸ்களும் இயக்கப்படுகின்றன..
அதுபோலவே, கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும், இன்று 3, மற்றும் நாளை 4-ந்தேதியில் 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் கூடுதலாக இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயங்க போகின்றன.
5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.. அதனால், www.tnstc.in. மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணித்தால், நெரிசலை தவிர்க்க முடியும் என்று அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை 5,827 பயணிகளும், நாளை சனிக்கிழமை 3,831 பயணிகளும் மற்றும் ஞாயிறுக்கிழமை 6,522 பயணிகளும் பேருந்துகளில் பயணம் செய்ய ஏற்கனவே ரிசர்வ் செய்துவிட்டார்கள்.. www.tnstc.in, http://www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications