‛விபச்சாரியின் மகன் சூத்திரன்..’ ஆ ராசாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு.. எச் ராஜா பரபர தகவல்
சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்பி ஆ ராசா மீது 15 நாளில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம் என பாஜகவின் எச் ராஜா கூறினார்.
நீலகிரி தொகுதி எம்பியாகவும், திமுகவின் துணை பொதுச்செயலாளராகவும் இருப்பவர் ஆ ராசா. இவர் சமீபத்திய பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பாஜக, அதிமுக, அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தினமும் இந்த பிரச்சனை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆ ராசா பேசியது என்ன?
ஆ ராசா பேசிய வீடியோவில், ‛‛நீ பார்சியாக இல்லை என்றால் நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?. இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கின்ற வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கின்ற வரை நீ பஞ்சமன்; இந்துவாக இருக்கின்ற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவர்களாக இருக்க விரும்புகின்றீர்கள்?'' என்ற வகையில் பேசி இருந்தார்.

எச் ராஜா கண்டனம்
இந்த பேச்சை கண்டித்து இந்து அமைப்பினர், பாஜகவினர் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் ஆ ராசா பேச்சு குறித்து புதுக்கோட்டையில் பாஜகவின் மூத்த தலைவரான எச் ராஜா பேட்டியளித்தார்.

நீதிமன்றம் செல்வோம்
எச் ராஜா கூறுகையில், ‛‛திமுகவின் ஆ ராசாவை தண்டிக்க வேண்டிய விதத்தில் தண்டிப்பதோடு, வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம். மாநிலம் முழுவதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எப்ஐஆர் ஆகியுள்ளது. அரசு 15 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களுக்கு நீதிமன்றம் செல்ல உரிமை உள்ளது'' என கூறியுள்ளார். இதன்மூலம் ஆ ராசா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளார்.

வன்மையாக கண்டிக்கத்தக்கது
"மோடி பெரியாராக சனாதான எதிர்ப்பாளராக வந்தால் நல்லது தான். ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்" என திருமாவளவன் பேசியது பற்றி எச் ராஜாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛திருமாவளவன் எனும் தீயசக்திக்கு தமிழ்நாட்டில் ஒரு தொகுதியிலேயாவது தனியாக நிற்கும் தைரியம் வருமா?. ஒரு தொகுதியிலாவது ஜெயிக்க முடியுமா?. பிரதமர் மோடியை அந்த பாதைக்கு வாங்க என கூப்பிடுவதே வன்மையாக கண்டிக்கத்தக்கது'' என்றார்.

கடைசி மன்னர் ஸ்டாலின்
மேலும் திமுக கட்சியின் செயல்பாடு கட்சி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எச் ராஜா, ‛‛திமுகவின் கடைசி மன்னர்தான் ஸ்டாலின் என்ற நிலை வரும். ஒருவர் சின்னவர் என கூறியுள்ளார். அவர் ஒன்னும் சின்னவர் இல்லை'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications