வில்லனுக்கு சாதி முத்திரை; நல்லவருக்கு கட்சி முத்திரை; நல்லாயிருக்கே உங்க நியாயம்; ஷியாம் பாய்ச்சல்!
சென்னை: ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லனை ஏன் சாதி அடையாளத்திற்குள் கொண்டு வந்தீர்கள் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
எல்லா சாதியிலும் திருடன் இருக்கிறான் என நடிகன் சொல்லும் போது, எல்லா சாதியிலும் நல்லவன் இருக்கிறான் என்பதே தனது எதிர்வினை என அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக ஷியாம் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்;

ஷியாம் கிருஷ்ணசாமி
''கோவிந்தனை வன்னியரா பார்க்கக் கூடாது, கம்யூனிஸ்டா தான் பார்க்கனுமாம்.. அப்போ படத்தில் போலீஸை கொடூர வில்லனா மட்டும் காட்டியிருக்கலாம், ஏன் சாதி அடையாளம் வந்தது? எல்லா சாதியிலும் திருடன் இருக்கிறான் என நடிகன் சொல்லும் போது, எல்லா சாதியிலும் நல்லவன் இருக்கிறான் என்பது தானே எதிரிவினையாக இருக்கும்'' என அவர் தெரிவித்திருக்கிறார்.

சாதி அடையாளம்
இதன் மூலம் ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லனுக்கு ஏன் மறைந்த வன்னியர் சங்கத் தலைவரின் பெயரை சூட்டி சாதிய அடையாளம் ஏற்படுத்தினீர்கள் என படக்குழுவை சூசகமாக வினவியிருக்கிறார் ஷியாம் கிருஷ்ணசாமி. கோவிந்தனை வன்னியராக பார்க்கக்கூடாது அவரை கம்யூனிஸ்டாக மட்டும் பார்க்க வேண்டும் என்ற கருத்தை அவர் ஏற்க மறுத்திருக்கிறார். இதனிடையே சூர்யாவை நடிகன் என குறிப்பிட்டுள்ள ஷியாம் கிருஷ்ணசாமி அவரது வசனத்திற்கு எதிர்வினையும் ஆற்றியிருக்கிறார்.

கம்யூனிஸ்ட்
ஷியாம் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ள கோவிந்தன் தான், ராஜாகண்ணுவுக்கு நீதி கோரி முதல் நபராக போராட்டத்தை முன்னெடுத்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகரான இவர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்நிலையில் இவரை வன்னியராக பார்க்கக்கூடாது கம்யூனிஸ்டாக பார்க்க வேண்டும் என நேற்று முதல் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

என்ன நியாயம்
வில்லனுக்கு மட்டும் வன்னியர் சமுதாய முத்திரை, நல்லவருக்கு மட்டும் கட்சி முத்திரையா என்பதே ஷியாம் கிருஷ்ணசாமி எழுப்பியுள்ள கேள்வியாகும். குறவருக்கு பதில் இருளர், படம் எடுக்கப்போவதாக அனுமதி பெறவில்லை, கேள்விக்கு பதிலில்லை என நாளுக்கு நாள் ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை அதிகமாகி கொண்டே வருகிறதே தவிர குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications