சோற்றை.. உருட்டி உருட்டி வாயில் திணித்து.. ஓவர் நைட்டில் பேமஸ் ஆன.. "சாப்பாட்டு ராமன்" திடீர் கைது!
சித்த மருத்துவர் பொற்செழியன் கைதாகி உள்ளார்
சென்னை: கை நிறைய சோற்றை, உருட்டி உருட்டி வாயில் திணித்து ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆனாரே சாப்பாட்டுராமனை நினைவிருக்கிறதா? சித்தா கிளினிக்கை வைத்து கொண்டு, நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகள் தந்து சிகிச்சை தந்ததால், அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
சோஷியல் மீடியாவில் சாப்பாட்டு ராமன் என்றாலே பொற்செழியன் பேர்தான் அடிபடும்.. அதிலும் யூடியூப்களில் இந்த சாப்பாட்டு ராமன் ரொம்பவும் ஃபேமஸ்.. தனியாகவே ஒரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலுக்கு 3 வருஷத்தில் 10 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் கிடைத்தனர் என்றால், இவர் பதிவிட்ட சாப்பாடு வீடியோக்கள்தான் அதற்கு காரணம்..!
அளவுகடந்த சாப்பாடுகளை சாப்பிட்டு வியக்கவைத்தவர்.. அதிக உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டு பிரபலமானவர்தான் இவர். குறிப்பாக, ஒரு குக்கர் நிறைய பிரியாணியை இலையில் போட்டு, தயிரை ஊற்றி, கடகடவென அள்ளி வாயில் போட்டு அனைவருக்கும் ஷாக் தந்தவர்.

சிக்கன்
இதில் ஹைலைட் என்னவென்றால், மட்டனையும், சிக்கனையும் ஒன்றாகவே, அளவுக்கு அதிகமாகவே சாப்பிடுவார்.. இப்படி நிறைய நிறைய சாப்பிட்டுவிட்டு, அது சீக்கிரமாக ஜீரணமாவதற்கு இவரே சில சித்த மருந்துகளையும் சாப்பிடுவார்.. அந்த மருந்துகளையும் யூடியூப் மூலமாகவே விற்று வந்தார்..

கிளினிக்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கூகையூர் கிராமத்தை சேர்ந்தவர்தான் இந்த சாப்பாட்டு ராமன்.. இவர் ஒரு சித்த மருத்துவர்.. 60 வயதாகிறது.. சித்த மருத்துவத்தில் பிஎஸ்எம்எஸ் படித்துவிட்டு கடந்த 28 வருடங்களாக அய்யப்பன் கிளினிக் ஒன்றை சொந்த ஊரிலேயே நடத்தி வருகிறார்.

உத்தரவு
இந்நிலையில், தன்னுடைய அய்யப்பன் சித்தா கிளினிக்கில், ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல்கள் கிடைத்தன.. இதையடுத்து, கலெக்டர் உத்தரவின் பேரில், மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சித்தா கிளினிக்கில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போதுதான், ஆங்கில மாத்திரைகள் பலவற்றை தன்னுடைய கிளினிக்கில் பொற்செழியன் வைத்திருந்ததும், பலருக்கு இதைவைத்து மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மருந்துகள்
அந்த ஆங்கில மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன், சித்தா கிளினிக்குக்கும் சீல் வைத்தனர்.. பின்னர், சாப்பாட்டு ராமன் பொற்செழியனை கைது செய்து, கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலிலும் ஜெயிலில் அடைத்தனர்.

ஜாமீன்?
இதனிடையே, மெடிக்கல் செக்கப் செய்யும்போது, சித்த டாக்டர் பொற்செழியனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.. இதையடுத்து, அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர்.. அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்... இதனிடையே, பொற்செழியன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்..!












Click it and Unblock the Notifications