பதற்றப்படுத்துறீங்க! தடுக்கி விழுந்த “நுங்கு புகழ்” ஷர்மிகா.. பேசக்கூடாதாம் -மீடியாக்களிடம் புலம்பல்
சித்த மருத்துவர் ஷர்மிகா இந்திய மருத்துவ இயக்குநரகம் முன் ஆஜரான பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டே கால் இடறி தடுக்கி விழுந்தார்.
சென்னை: நுங்கு, பீஃப், மார்பகம், குலோப்ஜாமூன் என அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை யூடியூப் சேனல்களில் பேசி சிக்கிய சித்த மருத்துவர் ஷர்மிகா இந்திய மருத்துவ இயக்குநரகத்தில் நேற்று ஆஜரான நிலையில், பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்டியபோது, அவர்களிடம் பேசிக்கொண்டே கால் இடறி தடுக்கி விழுந்தார்.
சூர்யா சிவா ஆடியோ மூலம் பிரபலமான பாஜக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியின் மகள் ஷர்மிகா. சித்த மருத்துவரான இவர் ஏராளமான யூடியூப் சேனல் நேர்காணல்களில் மருத்துவ குறிப்புகளை வழங்கி வந்தார்.
இதன் மூலமாக இவரும் மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில், சர்ச்சைக்குரிய மருத்துவ கருத்துக்களால் சமூக வலைதளங்களில் சமீப காலமாக அதிகளவில் விமர்சிக்கப்படும் நபராக மாறினார்.

நுங்கு சாப்பிட்டால்..
மருத்துவம் என்ற பெயரில் அறிவியலுக்கு புறம்பான மூட நம்பிக்கைகளை தன்னுடைய நேர்காணல்களின் மூலமாக இவர் புகட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன. "நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாக நல்ல வடிவத்தில் கிடைக்கும், குலோப் ஜாமூன் சாப்பிட்டால் ஒரு நாளில் 3 கிலோ எடை கூடும், தினசரி 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும், குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும்." என்று ஷர்மிகா பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

மாட்டுக்கறி சர்ச்சை
ஒரு நேர்காணலில் மாட்டுக்கறி சாப்பிடுவது தொடர்பாக பேசிய ஷர்மிகா, அறிவியலை ஓரம் வைத்துவிட்டு பேசுவோம் என்று தொடங்கினார். "நம்மை விட பெரிய விலங்கை சாப்பிட்டால் செரிமானம் ஆகாது. மாடு நம்மை விட பெரிய விலங்கு என்பதால் அதை சாப்பிடக்கூடாது." என்று கூறியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

குழந்தை யாருக்கு பிறக்கும்?
"குழந்தை பிறக்க பாலியல் உறவு உடல்நலக் குறைபாடு, போன்ற அனைத்தும் அடுத்தடுத்த காரணங்கள்தான். கடவுள்தான் குழந்தை பிறக்க மனசு வைக்க வேண்டும். ஒருவர் செய்த தீமையான காரியங்களால் வாரிசு இருக்கக்கூடாது என்றால் இருக்காது. ஒரு நல்ல மனிதன், எந்த பிரச்சனையும் செய்யாதவர் என்றால் அடுத்தடுத்த குழந்தை மாசம் கிடைக்கும்." என்று அவர் பேசியது அறிவியலுக்கு புறம்பான கருத்து என்று பலர் விமர்சித்தனர்.

ஹோமியோபதி இணை இயக்குநர்
இந்த நிலையில் கடந்த மாதம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன், "ஷர்மிகா சொல்வதற்கு மருத்துவ ஆதாரம் இல்லை. மருத்துவ நெறிகளுக்கு எதிராக பேசும் டாக்டர் ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று சித்த மருத்துவம் கூறவில்லை." என தெரிவித்தார்

ஷர்மிகாவுக்கு நோட்டீஸ்
இந்த நிலையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான இயக்குநரகம் மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனை அடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி மருத்துவ கவுன்சில் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார் ஷர்மிகா. இதற்கான விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் அளிக்க ஷர்மிகாவுக்கு உத்தரவிடப்பட்டது.

பேசக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்
ஆனால், அப்போது அவர் எழுத்துப்பூர்வ விளக்கம் கொடுக்காமல் மீண்டும் கால அவகாசம் வழங்க கோரினார் ஷர்மிகா. இதனை அடுத்து 24 ம் தேதி எழுத்துப்பூர்வ விளக்கம் கொடுப்பதாக அவர் தெரிவித்த நிலையில், நேற்று அவர் ஆஜரானார். பின்னர் வெளியில் வந்த அவரை செய்தியாளர்கள் சூழ்ந்தபோது, என்னை ஊடகங்களில் பேசக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்.

தடுக்கி விழுந்த ஷர்மிகா
அவர் சொன்னதை நான் பின்பற்ற வேண்டும் அல்லவா?" எனக் கூறியபோதே அவர் மாடிப்படியில் இருந்து தடுக்கி விழுந்தார். உடனே பார்த்தீர்களா? உங்களால்தான் நான் தடுக்கி விழுந்தேன். ஏன் பதட்டப்படுத்துறீங்க? என்று கேட்டுவிட்டு சென்றார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications