திடீரென ஏற்பட்ட கோளாறு.. நடுவழியில் ஆங்காங்கே நின்ற சென்னை புறநகர் ரயில்கள்..பரிதவித்த பயணிகள்

சென்னை திருவள்ளூர் புறநகர் வழித்தடத்தில் திடீரென சிக்னல்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை காரணமாக சென்னை திருவள்ளூர் புறநகர் வழித்தடத்தில் திடீரென சிக்னல்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்டிரலில் இருந்து புறநகர் வழியாக திருவள்ளூர் செல்லக்கூடிய மற்றும் அரக்கோணம் செல்லக்கூடிய ரயில்கள் அனைத்தும் 5 முதல் 10 நிமிட இடைவெளியில் தாமதமாக இயக்கப்பட்டன.

சென்னையில் சாலைகளில் திரும்பிய பக்கம் எல்லாம் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

அதுவும் பீக் ஹவர்ஸ்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் இருக்கும்.

புறநகர் ரயில்கள்

புறநகர் ரயில்கள்

அலுவலகம் செல்வோரும் பல்வேறு வேலைகளுக்காகவும் செல்பவர்களும் சரியான நேரத்திற்குள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். இதனால், சென்னை மக்களுக்கு தங்களின் பயண தேவையை பூர்த்தி செய்வதில் புறநகர் ரயில்களே பெரும் பங்கு வகிக்கின்றன. தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் புறகர் ரயில்கள் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருவள்ளூர் செல்லும் ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர்.

பயணிகள் கூட்டம்

பயணிகள் கூட்டம்

குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் புறநகர் ரயிலையே பெரிதும் நம்பியிருக்கின்றனர் என்றால் மிகையாகாது. இதனால், சில நிமிடங்கள் ரயில் தாமதம் ஏற்பட்டால் கூட பயணிகள் கூட்டம் ரயில் நிலையங்களில் அலைமோதும்.

 ஆங்காங்கே நின்ற ரயில்கள்

ஆங்காங்கே நின்ற ரயில்கள்

பீக் ஹவர்ஸ்களில் சதாரணமாகவே பயணிகள் கூட்டம் ரயில்களில் நிரம்பி வழியும். இதனால், ரயில் தாமதம் ஆனால் நிலைமையை சொல்லவே வேண்டாம். இந்த நிலையில், இன்று காலை சென்னை சென்ட்ரல் முதல் திருவள்ளூர் அரக்கோணம் மார்க்கத்தில் இன்று காலையில் ஏற்பட்ட சிக்னல்கள் கோளாறு காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மழை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தாமதமாக இயக்கப்பட்ட ரயில்கள்

தாமதமாக இயக்கப்பட்ட ரயில்கள்

சென்டிரலில் இருந்து புறநகர் வழியாக திருவள்ளூர் செல்லக்கூடிய மற்றும் அரக்கோணம் செல்லக்கூடிய ரயில்கள் அனைத்தும் 5 முதல் 10 நிமிட இடைவெளியில் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் பணியாளர்கள் கடும் அவதி அடைந்தனர். ரயில்கள் தாமதம் ஆனதால் ரயில் நிலையங்களில் கூட்டமும் அதிகமாக இருந்தது. சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+