Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sikkim & Arunachal Pradesh Election Results LIVE:

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

lok sabha election 2024                                               2024

லோக்சபா தேர்தல் லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்

Jun 01, 2024, 5:05 pm IST

கொல்கத்தாவில் லோக்சபா தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி ஓட்டளிக்க செல்லும் முன்பு அங்கிருந்த பொதுமக்களிடம் சகஜமாக பேசினார்.
Jun 01, 2024, 4:28 pm IST

மேற்கு வங்க மாநிலம் கட்கால் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரும், நடிகருமான தீபக் அதிகாரி கொல்கத்தாவில் ஓட்டளித்தார்.
Jun 01, 2024, 4:11 pm IST

பிற்பகல் 3 மணி வரை பதிவான வாக்குப்பதிவு விவரம்: ஹிமாச்சல பிரதேசம் 58.41%, உத்தரப் பிரதேசம்- 46.83%, மேற்கு வங்கம்-58.46%, ஜார்கண்ட்- 60.14%, சத்தீஸ்கர் 52.61%, பீகார்- 42.95%, பஞ்சாப் 46.38%, ஒடிசா 49.77% வாக்குகள் பதிவு
Jun 01, 2024, 4:01 pm IST

லோக்சபா தேர்தல் பிற்பகல் 3 மணி வரை 49.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 60.14% வாக்குகளும், குறைந்தபட்சமாகப் பீகார் மாநிலத்தில் 42.95% வாக்குகளும் பதிவு
Jun 01, 2024, 3:32 pm IST

இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்திற்கு சென்றுள்ளார்.
Jun 01, 2024, 3:08 pm IST

மறைந்த பாடகர் சித்து மூஸ்வாலாவின் தந்தை பால்கவுர் சிங், பஞ்சாப் மாநிலத்தில் வாக்களித்தார்
Jun 01, 2024, 2:59 pm IST

இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்துக்கு வந்தடைந்தார்..
Jun 01, 2024, 2:36 pm IST

இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி புறப்பட்டார் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்.
Jun 01, 2024, 2:13 pm IST

பிற்பகல் 1 மணி வரை பதிவான வாக்குப்பதிவு விவரம்: ஹிமாச்சல பிரதேசம் 48.63%, உத்தரப் பிரதேசம்- 39.31%, மேற்கு வங்கம்-45.07%, ஜார்கண்ட்- 46.80%, சத்தீஸ்கர் 40.14%, பீகார்- 35.65%, பஞ்சாப் 37,80%, ஒடிசா 37.64% வாக்குகள் பதிவு
Jun 01, 2024, 2:00 pm IST

பிற்பகல் 1 மணி வரை அதிகபட்சமாக இமாச்சல பிரதேசத்தில் 48.63% வாக்குகள் பதிவு.. குறைந்தபட்சமாகப் பீகாரில் 35.65% வாக்குகள் பதிவாகியுள்ளன
Jun 01, 2024, 1:58 pm IST

ஏழாம் கட்ட லோக்சபா தேர்தலில் பிற்பகல் 1 மணி வரை 40.09% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Jun 01, 2024, 1:40 pm IST

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் இன்னும் சற்று நேரத்தில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
Jun 01, 2024, 1:11 pm IST

வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் குதிரையில் வந்த ஒருவர் வாக்களித்தார்.
Jun 01, 2024, 12:46 pm IST

கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் கோவில் துறவிகள் இன்று நடைபெறும் ஏழாம் கட்ட தேர்தலில் வாக்களித்தனர்.
Jun 01, 2024, 12:23 pm IST

காலை 11 மணி வரை பதிவான வாக்குப்பதிவு விவரம்: ஹிமாச்சல பிரதேசம் 31.92%, உத்தரப் பிரதேசம்- 28.02%, மேற்கு வங்கம்-28.10%, ஜார்கண்ட்- 29.55%, சத்தீஸ்கர் 25.03%, பீகார்- 24.25%, பஞ்சாப் 23.91%, ஒடிசா 22.64% வாக்குகள் பதிவு
Jun 01, 2024, 12:14 pm IST

காலை 11 மணி வரை அதிகபட்சமாக இமாச்சல பிரதேசத்தில் 31.92% வாக்குகள் பதிவு.. குறைந்தபட்சமாக ஒடிசாவில் 22.64% வாக்குகள் பதிவாகியுள்ளன
Jun 01, 2024, 12:04 pm IST

ஏழாம் கட்ட லோக்சபா தேர்தலில் காலை 11 மணி வரை 26.3% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Jun 01, 2024, 11:41 am IST

பீகார் முதல்வரும் ஜேடியு தலைவருமான நிதிஷ்குமார் பக்தியார்பூரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்
Jun 01, 2024, 11:21 am IST

மண்டி லோக்சபா தொகுதியின் பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் வாக்களித்த பிறகு, மண்டியில் உள்ள பாஜக அலுவலகத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
Jun 01, 2024, 11:02 am IST

சிரோமணி அகாலி தள கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதல், ஃபிரோஸ்பூர் மக்களவை தொகுதியில் பாதல் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
Jun 01, 2024, 10:38 am IST

காலை 9 மணி வரை பதிவான வாக்குப்பதிவு விவரம்: ஹிமாச்சல பிரதேசம் 14.35%, உத்தரப் பிரதேசம்- 12.94%, மேற்கு வங்கம்-12.63%, ஜார்கண்ட்- 12.15%, சத்தீஸ்கர் 11.64%, பீகார்- 10.58%, பஞ்சாப் 9.64%, ஒடிசா 7.69% வாக்குகள் பதிவு
Jun 01, 2024, 10:35 am IST

இமாச்சல பிரதேசத்தில் அதிகபட்சமாக 14.35% வாக்குகள் பதிவு.. ஒடிசா மாநிலத்தில் குறைந்தபட்சமாக 7.69% வாக்குப்பதிவு
Jun 01, 2024, 10:34 am IST

ஏழாம் கட்ட லோக்சபா தேர்தலில் காலை 9 மணி வரை 11.31% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Jun 01, 2024, 10:01 am IST

பிரபல பாலிவுட் நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத், மண்டியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
Jun 01, 2024, 9:39 am IST

மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வன்முறை வாக்குப்பதிவு இயந்திரத்தை சிலர் கால்வாயில் வீசியுள்ளனர் இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் தண்ணீரில் வீசப்பட்டு கிடந்ததால் பரபரப்பு வன்முறை சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கு வங்கத்தில் இன்று 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது
Jun 01, 2024, 9:39 am IST

காலை 9 மணி வரை பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி லோக்சபா தொகுதியில் 12.91% வாக்குகள் பதிவு
Jun 01, 2024, 9:21 am IST

7ஆம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் மாநிலம் கிர் சோம்நாத்தில் உள்ள சோம்நாத் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
Jun 01, 2024, 9:05 am IST

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது மனைவி டாக்டர் குர்பிரீத் கவுர் உடன் சங்ரூர் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
Jun 01, 2024, 8:47 am IST

மற்ற கட்சிகளில் வாக்களித்தவர்கள் இப்போது மீண்டும் காங்கிரஸ் நோக்கி வந்துள்ளனர். மக்கள் மாற்றத்திற்கான மனநிலையில் இருப்பதாகத் தெரிகிறது. தவறான ஜிஎஸ்டி முறையால் வணிகர்கள், நெசவாளர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முறை இந்தியா கூட்டணி வெல்வது உறுதி- வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸின் அஜய் ராய்
Jun 01, 2024, 8:30 am IST

பீகார் மாநிலம் பாட்னாவின் சரண் மக்களவைத் தொகுதியில், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+