ரொம்ப பிரச்சினை கொடுக்குறாங்க.. என்னை நீங்கள் பார்த்துக்கோங்க.. "மாநாடு" மேடையில் சிம்பு கண்ணீர்!
சென்னை: ரொம்ப பிரச்சினை கொடுக்கறாங்க, ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன் என மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசினார்.
Recommended Video
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இதில் எஸ்ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா, மனோஜ், கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்டி தயாரித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவிருந்த நிலையில் தற்போது நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலம்பரசன் மாநாடு
இந்த நிலையில்தான் இன்று காலை மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிலம்பரசன், மாநாடு ரிலீஸ் குறித்த பிரச்சினைகளை கூறும் போது துக்கம் தாளாமல் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். அவர் பேசுகையில் என்னுடைய படங்களுக்கு பிரச்சினை வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

ரிலீஸ்
சுற்றி சுற்றி நிறைய பேர் பிரச்சினை செய்கிறார்கள். ஆனால் அவற்றை எல்லாம் தாக்குப்பிடித்து நிற்கும் ஒரு தயாரிப்பாளரால் மட்டும்தான் இந்த படத்தை எடுக்க முடியும் என்பது தெரிந்துவிட்டது. அப்போதுதான் நான் சுரேஷ் காமாட்சியிடம் இந்தப் படத்தை நீங்கள் எடுங்கள் என நான் சொன்னேன். அவரும் எத்தனையோ பிரச்சினைகளைத் தாண்டி படத்தை ரிலீஸ் வரை கொண்டு வந்துவிட்டார்.

யுவன்சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா எனக்கு மிகவும் பிடித்தமான இசையமைப்பாளர். நான் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் அவர் தாங்கிக் கொள்வார். அத்தனை பொறுமையாக அவர் இருப்பதால் அவரது ராசி, நட்சத்திரத்தை கேட்டுள்ளேன். அதே ராசி , நட்சத்திரம் உள்ள பெண்ணைத்தான் நான் திருமணம் செய்ய வேண்டும் என சொல்வேன். இந்த படத்திற்காக நான் மற்றும் பட யூனிட்டே நிறைய ரிஸ்க் எடுத்துள்ளார்கள்.

கண்ணீர்
ரொம்ப பிரச்சினை கொடுக்குறாங்க... ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். என் பிரச்சினைகளை நான் பார்த்துக்கொள்கிறேன். என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி மேடையில் சிம்பு அழுதுவிட்டார். தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சிம்புவின் எந்த படத்தையும் ரிலீஸ் செய்ய விடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்கள் என காவல் துறை ஆணையரிடம் சிம்புவின் தாய் உஷா ராஜேந்தர் புகார் அளித்திருந்தார். மேலும் இது போல் தொடர்ந்து யாராவது பிரச்சினை கொடுத்தால் முதல்வர் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருப்பேன் என உஷா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications