'வந்தான்,Postponeduh,ரிப்பீட்டு.. வந்தான், Postponeduh,ரிப்பீட்டு..' தெறிக்கவிடும் சிம்பு ரசிகர்கள்
சென்னை: சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் முதலில் நாளை வெளியாகாது என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அத்திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
நடிகர் சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு, வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த் திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் எஸ். ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.
டைம் லூப் கான்சேப்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடைசிக் கட்ட பிரச்சினை
முதலில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் மாநாடு திரைப்படம் நாளை வெளியாகாது எனத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இருப்பினும், அடுத்த சில மணி நேரங்களிலேயே படம் திட்மிடப்படி வெளியாகும் எனப் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவும், மற்றொரு தயாரிப்பாளரான JSK Film corporationஇன் சதீஷ்குமாரும் ட்வீட் செய்தனர். மாநாடு திரைப்படம் குறித்து சர்ச்சை கிளம்புவது இது முதல்முறை இல்லை.

மாநாடு - கடந்து வந்த பாதை
முதன்முதலில் மாநாடு திரைப்படம் குறித்த அறிவிப்பு முதலில் கடந்த 2018ஆம் ஆண்டு திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. வெங்கட் பிரபு- சிம்பு இணையும் இத்திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஜூலை மாதம் மாநாடு ஃபர்ஸ் லூக் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் பரபரப்பாக ஷூட்டிங் தொடங்கியது. சிம்பு திரைப்படத்தின் அப்டேட்கள் இப்படி மளமளவென வந்தது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

மகாமாநாடு
இந்தச் சூழலில் ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட, மாநாடு திரைப்படத்தை சிம்புவுக்கு பதிலாக வேறு ஹூரோவை வைத்து எடுக்கத் தயாரிப்பாளர் தரப்பில் முடிவெடுக்கப்பட்டது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மகாமாநாடு என் திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்த நடிக்கவுள்ளதாக அறிவித்தார் சிம்பு. இருப்பினும், சில மாதங்களில் கருத்து வேறுபாடுகள் சரியாக, மாநாடு ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. மாகமாநாடு குறித்த அறிவிப்பும் அதன் பிறகு வெளியாகவில்லை.

கொரோனா ஊரடங்கு
அதன் பிறகு கடந்தாண்டு படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் மாதம் முக்கிய காட்சிகளை எடுக்க ஹைதராபாத் செல்ல படக்குழு திட்டமிட்டிருந்த போது தான் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதையெல்லாம் தாண்டி இந்தாண்டு ஏப்ரல் மாதம் மாநாடு ஷூட்டிங் முழுவதுமாக முடிந்தது. படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள்ளே பல பிரச்சினைகளை எதிர்கொண்ட மாநாடு திரைப்படம், ரிலீஸ் சமயத்திலும் சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கியது.

தீபாவளி ரிலீஸ்
மாநாடு திரைப்படம் முதலில் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அந்தச் சமயத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அண்ணாத்த திரைப்படத்துடன் மோதுவதில் தயாராகவே இருந்தது மாநாடு குழு. இந்தச் சூழலில் தான் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் AAA படத்தின் நஷ்டம் தொடர்பாகப் புகார் அளித்தார். இதனால் மாநாடு படம் தள்ளிப் போனது.

நவ. 25
மாநாடு படம் நவ. 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நவ. 18ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அப்போது மேடையிலேயே கண்கலங்கிய சிம்பு, 'எனக்கு இருக்கும் பிரச்சினைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை மட்டும் நீங்கள் பார்ர்த்துகோங்க' என உருக்கமாகப் பேசினார். இது அப்போது மிகப் பெரிய அளவில் வைலரானது.

படம் ரிலீஸ் கன்பார்ம்
இந்தச் சூழலில் கான் தயாரிப்பாளர் சரேஷ் காமாட்சி, தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்வதாக ட்வீட் செய்திருந்தார். இருப்பினும், அதன் பிறகும் பேச்சுவார்த்தை தொடரவே ஒரு வழியாக சுமுகமான ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்தே இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றைத் தனது ட்விட்டரில் பகிர்ந்ததுள்ளார். மாநாடு திரைப்படத்திற்கு அன்பும் ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ள வெங்கட் பிரபு, #MaanaaduFrom25thNovember #maanaadu ஆகிய ஷேஷ்டேக்குகளை பயன்படுத்தியுள்ளார்,

வந்தான், postponeduh, ரிப்பீட்டு
இதன் மூலம் இதன் மூலம் மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாவது உறுதியாகியுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநாடு படத்தின் டீசரில் எஸ் கே சூர்யா பேசியிருந்த ஒரு டையலாக் இப்போது இருக்கும் சூழலுடன் ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். அதில் வரும் "வந்தான், சுட்டான், போனான், ரீப்பீட்டு.. வந்தான், சுட்டான், போனான், ரீப்பீட்டு" என்ற எஸ் கே சூர்யாவின் வசனத்தைப் போல 'வந்தான், postponeduh, ரிப்பீட்டு.. வந்தான், postponeduh, ரிப்பீட்டு' என மாநாடு படமும் பல பிரச்சினைகளைத் தாண்டி வருவதாக ரசிகர்களும் பலரும் ட்விட்டரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர், மேலும், படத்தின் பிரச்சினைக்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்று முந்தைய பட நஷ்டமே இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

ரசிகர்கள் உற்சாகம்
தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் மநாடு திரைப்படத்தின் முதல் காட்சி நவ. 25ஆம் தேதி காலை 5 மணிக்குத் திரையிடப்படுகிறது. பல தடைகளைத் தாண்டி வரும் மாநாடு திரைப்படத்தைக் காண அவரது ரசிகர்கள் இப்போதே தியேட்டர்களுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications