கஞ்சா விற்பனை வழக்கில் சிம்பு பட தயாரிப்பாளர் கைது.. வீக்கெண்டில் போதை பார்ட்டி.. வெளியான ஷாக் தகவல்
சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில், சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஷர்புதீன் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஷர்புதீனிடம் இருந்து ரூ.27 லட்சம் ரொக்க பணமும், ஒரு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை திருமங்கலத்தில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் தியாகேஸ்வரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த ஷர்புதீன் என்பவருக்கு கஞ்சா விற்றது தெரியவந்தது. ஷர்புதீன், சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' படத்தின் இணைத் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ஷர்புதீன், சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் சரத், முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த சீனிவாசன் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 10 கிராம் கஞ்சா, மற்றும் சுமார் 27 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஷர்புதீன் வீட்டில் வார இறுதிகளில் இரவு நேரங்களில் சினிமா பிரபலங்கள் போதைப்பொருள் பயன்படுத்தி விருந்து நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், முன்னணி அரசியல் கட்சியின் வியூக வகுப்பு நிறுவனத்தில் ஷர்புதீன் பணியாற்றி வருவதும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 27 லட்சம் ரூபாய் பணம், அந்நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், கஞ்சா விற்பனையில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளதா? போதை விருந்தில் யார் யார் பங்கேற்றார்கள் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications