உங்க ஆதார் கார்டில் இப்படியெல்லாம் நடக்குதா.. உடனே பாருங்க.. தடுப்பதற்கு இதோ சில எளிய வழிமுறைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறப்பு தொடங்கி இறப்பு வரை ஆதார் எண் என்பது தற்போது அனைத்திற்கும் கட்டாயமாகிவிட்டது. ஆனால் நம்முடைய ஆதார் தகவல்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் முக்கியமான கடமையாகும். இதை பாதுகாப்பது என்பது ஏதோ பெரிய வேலையெல்லாம் கிடையாது. ஜெஸ்ட் உங்க ஆதார் பயோமெட்ரிக்ஸை லாக் செய்தால் போதும்.

இந்தியாவில் ஆதார் கொண்டுவரப்பட்டதே பெரும் சர்ச்சைகளுக்கு இடையில்தான். தொடக்கத்தில் ஆதார் கட்டாயம் இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் பின்னாட்களில் இது அனைத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டது. இப்படி இருக்கையில் நம்முடைய ஆதார் தகவல்கள் சில திருடப்படுவதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான செய்தி ஏறத்தாழ அனைவரது வயிற்றிலும் புளியை கரைத்தது. அதாவது தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் 50 லட்சம் ஆதார் கார்டின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்பதுதான் அந்த செய்தி.

Simple Steps to Lock Aadhaar Card Biometrics

தமிழ்நாட்டில் சுமார் 2 கோடி ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. இதில் ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் கடந்த 2021ம் ஆண்டு அடையாளம் தெரியாத சில ஹேக்கர்கள் இந்த பொது விநியோக திட்டத்தின் சாஃப்வேரை ஹாக் சேய்து இதிலிருந்து சுமார் 49 லட்சத்திற்கும் அதிகமான ஆதார் கார்டின் தகவல்களை திருடியுள்ளதாக டெக்னிசாம் எனும் சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பின்னர்தான் ஆதார் தகவல்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட தொடங்கியது.

இதற்காக UDAI ஏற்கெனவே சில வழிகளை வழங்கியிருக்கிறது. அதாவது ஆதார் தகவல்களை லாக் செய்து வைப்பது. இதன் மூலம் நம்முடைய தகவல்களை பாதுகாக்க முடியும். இதற்கு முதலில் https://myaadhaar.uidai.gov.in/ எனும் வெப்சைட்டை ஓபன் செய்து கொள்ள வேண்டும். அதில் 11வது ஆப்ஷனாக ஆதார் தகவல்களை லாக் மற்றும் அன்லாக் செய்வது கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்தால் அதில் மூன்று படிநிலைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஸ்டெப் 1ன் படி, ஆதாரை லாக் / அன்லாக் செய்வதற்கு முன், 16 இலக்க விர்ச்சுவல் ஐடியை (VID) உருவாக்க வேண்டும். ஏனெனில் இதனை லாக் / அன்லாக் செய்வதற்கு விர்ச்சுவல் ஐடி (VID) மட்டும்தான் பயன்படும். இந்த ஐடியை உருவாக்க ஒரு ஆப்ஷன் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து ஐடியை உருவாக்கலாம். அல்லது 1947 எனும் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் கூட இந்த ஐடியை உருவாக்க முடியும். இப்போது ஐடி கிடைத்துவிட்டால் ஸ்டெப் 2ஐ பின்பற்றவும்.

ஸ்டெப் 2ன் படி, இந்த ஐடியை பயன்படுத்தி தற்போது ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்யவும். இந்த புராசஸ் முடிந்தவுடன் உங்கள் ஆதார் எண் முடக்கப்படும். எனவே மூன்றாவது நபரால் உங்களுடைய ஆதார் தகவல்களை திருட முடியாது. இதன் பின்னர் ஆதாரை அன்லாக் செய்ய ஸ்டெப் 3ஐ பின்பற்றவும்.

ஸ்டெப் 2ன் படி, ஏற்கெனவே பயன்படுத்திய 16 இலக்க விர்ச்சுவல் ஐடியை (VID) கொண்டு அன்லாக் செய்யலாம். இனில் உங்கள் ஆதாரை பயன்படுத்த முடியும். இதில் கவனம் வைத்துக்கொள்ள வேண்டியது இந்த 16 இலக்க விர்ச்சுவல் ஐடியைதான் (VID). அவ்வளவுதாங்க இனி ஆதார் தகவல்கள் எல்லாம் பத்திரமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+