காப்பாற்ற முயற்சித்தோம்.. ஆனால் விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் முடியவில்லை.. சிம்ஸ் மருத்துவர்
சென்னை: நடிகர் விவேக் இதயம் பலவீனமாக இருந்ததால் எங்களது அனைத்து முயற்சிகளும் பலனை அளிக்கவில்லை என சிம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Recommended Video
லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணனுடன் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக குலுமணாலி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு படப்பிடிப்புக்கு சென்ற நடிகர் விவேக் அண்மையில் தமிழகம் திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று காலை உடற்பயிற்சி செய்துவிட்டு விருகம்பாக்கம் வீட்டில் தனது குடும்பத்தினருடன் விவேக் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினார்.

எக்மோ கருவி
இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதய செயல்பாடு குறைந்ததால் இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பலனின்றி விவேக் மரணம்
அவரது இடது ரத்தக் குழாயில் இருந்த 100 சதவீத அடைப்பு சரி செய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும் 24 மணி நேரம் போனால்தான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிகிச்சை
இதுகுறித்து சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் ராஜு சிவசாமி அளித்த பேட்டியில் கூறுகையில் நேற்று காலை 11 மணியளவில் நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்கு விவேக் கொண்டு வரப்பட்டார். அப்போது அவருக்கு நாடித்துடிப்பே இல்லை. உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இதயத்திற்கு செல்லும் குழாய்
ஆஞ்சியோகிராம் செய்ததில் அவருக்கு இதயத்திற்கு செல்லும் இடது புற ரத்தக் குழாயில் 100 சதவீதம் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு அந்த அடைப்புகள் நீக்கப்பட்டன. எக்மோ செய்த பிறகுதான் இதற்கான சிகிச்சையை மேற்கொண்டோம்.

இதயம் பலவீனம்
பாதிப்பு தீவிரமாக இருந்ததால் விவேக் உயிரிழக்க காரணமாகிவிட்டது. விவேக்கிற்கு பலவிதமான சிகிச்சைகள் அளித்தும் அவரது இதயம் பலவீனமாக இருந்ததால் எங்களது முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த மாரடைப்பு ஒரே நாளில் ஏற்படாது. ரத்தக் கொதிப்புக்கு அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர் என்றார் மருத்துவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications