Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெனீஸ் போல வருடா வருடம்.. மிதக்கும் சென்னை.. பைக் போல அத்தியாவசியமான போட்.. எவ்வளவு விலை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெனீஸ் போல இந்த வருடமும் சென்னை மிதக்க தொடங்கி உள்ளது. மக்கள் பலரும் தண்ணீரில் மிதக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டு உள்ளது. மீண்டும் மீண்டுமா.. இதுக்கு ஒரு எண்டே இல்லையா என்று சொல்லும் அளவிற்கு சென்னை இந்த வருடமும் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

சென்னையில் வருடா வருடம் வெள்ளம் ஏற்பட தொடங்கி உள்ளது. 2015க்கு முன் அரிதாக இருந்த வெள்ளம்.. தற்போது இயல்பாகிவிட்டது. எல்லா வருடமும் டிசம்பர் மாதம் வந்தால் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அதிலும் இந்த வருடம் சென்னையில் 4000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பல இடங்களில் வெள்ள நீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளன. சாலைகளில் தேங்கும் தண்ணீர்.. அப்படியே வடிகால் வழியாக கால்வாய்களில் கலந்து.. கடலுக்கு செல்லும். இதுவே வடிகால் அமைப்பு.

Since Chennai is Flooding every year, Why people should buy life or turf boats?

சென்னை வடிகால் அமைப்பு: இதற்காக சென்னையையே கூறு போட்டு மாபெரும் வடிகால்களை அமைத்தனர். பொதுவாக சென்னையில் நேற்று முதல்நாள் பெய்தது போல எல்லாம் மழை பெய்து இருந்தால் சென்னை 4-5 நாட்களுக்கு மிதந்து இருக்கும். சென்னையே மொத்தமாக முடங்கி இருக்கும்.

சென்னையில் தண்ணீர் தேங்கி உள்ளது: இந்த வடிகால் அமைப்புகள் இருந்தும் கூட எதிர்பாராத அதி தீவிர கனமழை காரணமாக சென்னையில் வடிகால்களும் பயன் அளிக்காமல் தண்ணீர் தேங்கி உள்ளது.

( 2015 வெள்ளம் போல.. 2023 வெள்ளத்திற்கு ஏன் தன்னார்வலர்கள் திரளவில்லை? பின்னணியில் இப்படி ஒரு காரணமா?)

ஏனென்றால் இது 2015ஐ விட மோசமான வெள்ளம். 2015ஐ விட மோசமான மழை. ஆனாலும் சென்னை மறுநாளே வேகமாக மீண்டு வந்தது. பல ஏரியாக்கள் மிக வேகமாக மழை வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்தது. சென்னை இப்படி சட்டென எழுந்து நிற்க ஒரே காரணம்.. இந்த வடிகால் அமைப்புகள்தான். இந்த வடிகால் அமைப்புகள் மட்டும் இல்லை என்றால் சென்னை மிக கடுமையான சூழ்நிலையில் சிக்கி தவித்து இருக்கும். இப்போதும் கூட வடிகால்கள் இல்லாத இடங்களில்தான் மக்கள் கடுமையாக சிக்கி தவித்து வருகின்றனர்.

படகுகள் அத்திவாசியம்: வெனீஸ் போல இந்த வருடமும் சென்னை மிதக்க தொடங்கி உள்ளது. இப்படிபட்ட நிலையில் சென்னையில் படகுகள் அடிப்படை, அத்தியாவசிய வாகனமாக மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது போன்ற விஷயங்களை கிண்டலாக, காமெடியாக நினைக்காமல் சீரியசாக எடுக்க வேண்டிய காலம் வந்துள்ளது.

பொதுவாக பல்வேறு நாடுகளில் கடலோரங்களில் வசிக்கும் மக்கள் இது போல படகுகளை வைத்துக்கொள்வது வழக்கம். பெரிய பெரிய படகுகள் இல்லாமல் கயாக் படகுகள், சர்ப் டர்ப் வகை கப்பல்கள் லைப் டர்ப்கள் போன்றவைகளை பயன்படுத்த முடியும். எளிதாக சைக்கிள் போல இதை வீட்டிலேயே வைத்துக்கொள்ள முடியும்.

Since Chennai is Flooding every year, Why people should buy life or turf boats?

படகுகள்: வீடுகளில் இருக்கும் ஸ்டார் அலமாரிகளில், ஸ்லாப்களில் இது போன்ற கயாக் போட்களை வைத்துக்கொள்ள முடியும். அதேபோல் சர்ப் டர்ப் வகை கப்பல்கள் லைப் டர்ப்கள் போன்றவைகளை பயன்படுத்த முடியும்.

கயாக் படகுகள் பொதுவாக ஒருவர் அல்லது இருவர் ஓட்டும் படகுகள் ஆகும். முதல் இமேஜில் இந்த படகு காட்டப்பட்டு உள்ளது. இந்தியாவில் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கிடைக்கும். டூ சீட்டர், சிங்கிள் சீட்டர் போன்ற வகைகள் உள்ளனர்.

Since Chennai is Flooding every year, Why people should buy life or turf boats?

சர்ப் டர்ப் வகை கப்பல்கள் கொஞ்சம் கூடுதல் விலை. இது மோட்டார் இல்லாமல் 70 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும். மோட்டரோடு 1 லட்சத்திற்கு மேல் கிடைக்கும். 2 - 3 சீட்டர்கள் இருக்கும் வகையில் இந்த படகுகள் கிடைக்கும்.

Since Chennai is Flooding every year, Why people should buy life or turf boats?

லைப் டர்ப்கள் போன்றவை காற்று அடைக்க கூடிய கப்பல்கள். இவை காற்று இல்லாமல் அப்படியே ஒரு பாக்சில் அடைக்க முடியும். காற்று அடைத்து அவசர காலத்தில் பயன்படுத்த முடியும். இதுவும், ஒரு ஆள் பயணம் செய்யும் கப்பல் 40 ஆயிரத்தில் இருந்து 2-3 லட்சம் ரூபாய் வரைக்கும் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+