Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2015 வெள்ளம் போல.. 2023 வெள்ளத்திற்கு ஏன் தன்னார்வலர்கள் திரளவில்லை? பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2015ல் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது களத்தில் இருந்த தன்னார்வலர்கள் அளவிற்கு 2023ல் தன்னார்வலர்கள் களத்தில் இல்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

2015ல் சென்னை வெள்ளத்தில் மூழ்கிய போது தமிழ்நாடே சேர்ந்து வந்து சென்னைக்கு உதவியது. 2021ல் ஏற்பட்டது போல 2023ல் தன்னார்வலர்கள் களத்தில் இல்லை. பிரபலங்கள் பெரிதாக உதவி செய்ய முன் வரவில்லை, இளைஞர்கள் பெரிதாக களத்தில் இல்லை.

என்ஜிஓக்கள் பெரிதாக களத்திற்கு வரவில்லை. ஏன் எதிர்க்கட்சிகள் கூட இதை பெரிதாக களத்தில் இறங்கி பணிகளை செய்யவில்லை. இந்த மனநிலைக்கு பின் என்ன காரணம் இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கு பின் வரும் விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரணங்கள் என்னென்ன?: சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தது 70 சதவிகித பகுதிகள் இயல்பு நிலைக்கு மறுநாளே திரும்பிவிட்டன. அதிலும் வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகள் தவிர மற்ற பகுதிகள் பெரும்பாலும் மறுநாளே மீண்டு விட்டன. இது முக்கிய காரணம் .

( இன்னும் 1 வாரத்தில்.. சென்னையை நோக்கி அடுத்த புயலா? தீயாய் பரவிய செய்தி.. வெதர்மேன் சொன்ன விளக்கம்!)

  • சென்னையில் 2015ல் கிட்டத்தட்ட ஒரு வாரம் வெள்ளம் இருந்தது. 1 வாரம் மக்கள் உதவி இன்றி தவித்தனர். தினமும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு திணறி வந்தனர்.
  • 2015ல் அரசு இயந்திரமும் வேகமாக செயல்படவில்லை. அமைச்சர்கள், முதல்வர் , அதிகாரிகள் களத்தில் இல்லை. ஆனால் இந்த முறை அப்படி இல்லை. இந்த முறை அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லா நேரமும் களத்தில் உள்ளனர்.
  • இதனால் தானாகவே மக்களுக்கு.. அதுதான் அவர்கள் இருக்கிறார்களே.. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுவும் கூட தன்னார்வலர்கள் குறைய காரணம்.
  • 2015ல் முழுக்க முழுக்க சமூக வலைத்தளங்களில் தன்னார்வலர்கள் சேர்ந்து உதவிகளை செய்தனர். ஆனால் இந்த முறை 2015 அளவிற்கு உதவிகள் கேட்கப்படவில்லை. உதவிகள் கேட்கப்பட்டாலும் அதை அமைச்சர்கள், நிர்வாகிகள் நேரடியாக தலையிட்டு தீர்த்து வருகின்றனர். அரசே நேரடியாக இவர்களிடம் உதவிகளை செய்தது. இதனால் தன்னார்வலர்கள் தேவை குறைவாக உள்ளது.
Why are there no volunteers for the 2023 Chennai flood, Like the 2015 flood? Is there a reason?
  • பல இடங்களில் மறுநாளே அலுவலக தொடங்கிவிட்டது சென்னையில். இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் பகுதிகளை தவிர.. மற்ற இடங்களில் மக்கள் பணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
  • அதுபோக தன்னார்வலர்கள் குறைவாக இருக்க காரணம்.. வெள்ளபாதிப்பு குறைவாகவே இருப்பதுபோல பொதுவான எண்ணம் உருவானதே இதற்கு காரணமாக இருக்கலாம். நகரத்தை சுற்றி இருக்கிற பகுதிகள் எல்லாம் இன்னமும் மூழ்கியே இருக்கின்றன. ஆனால் நகரத்தின் மையப்பகுதியில் பாதிப்பு குறைவு.. என்பதும் தன்னார்வலர்கள் குறைவாக இருக்க காரணம்.
  • இந்த முறை சென்னையின் மையப்பகுதி உடனே மீண்டுவிட்டது. அதனாலெயே சென்னை மீண்டதாக ஒரு கருத்து உருவாகிவிட்டது. 2015ல் அது யாருமே எதிர்பாரா பேரிடர். அதனால் எல்லோரும் வந்தனர் என்று நினைக்கிறேன். இந்த முறை முன்கூட்டியே எல்லாம் தயார் செய்யப்பட்டுவிட்டது. சென்னை மக்களும் இது போன்ற வெள்ளத்திற்கு தயாராக தொடங்கிவிட்டனர்.
  • காரணம் 2015ம் ஆண்டு 5 நாள் வரை மின்சாரம் இல்லாமல் இருந்ததால் யாரும் வேலைக்கு சொல்லாமல் மீட்புபணிக்கு வந்தார்கள். இப்பொழுது நிலைமை அப்படியில்லை. மறு நாளே மின்சாரம் வந்துவிட்டது. அது போக WFH option உள்ளது. இதனால் மறுநாளே பணிக்கு திரும்ப தொடங்கிவிட்டனர்.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+