ஆபத்தான கட்டத்தை தாண்டிய பின்னணி பாடகி கல்பனா.. வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை!
ஹைதராபாத்: பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பின்னணி பாடகி கல்பனா, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருடைய வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த குடியிருப்பு வாசிகள் நேற்று மாலை அவரது வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் வீட்டின் உள்ளே இருந்து யாரும் கதவைத் திறக்கவில்லை.

பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினர் அளித்த தகவலின்படி, கதவை உடைத்து அவரது வீட்டிற்குள் போலீசார் நுழைந்தபோது சுயநினைவற்ற நிலையில் அவர் இருப்பதைக் கண்டனர். போலீசார் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கி கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர். தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட கல்பனா, தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர் தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது தற்கொலை முயற்சிக்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த நேரத்தில், அவரது கணவர் சென்னையில் இருந்தார், ஆனால் செய்தியைக் கேட்டவுடன் உடனடியாக ஹைதராபாத் சென்றார். பாடகி கல்பனாவுக்கு நெருக்கமான பலர் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தனர். கல்பனாவின் சக பாடகியான சுனிதா மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்துள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்தவர் பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர். இவருடைய தந்தை டிஎஸ் ராகவேந்தர் ஒரு நடிகர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர். அவரது அம்மாவும் பின்னணி பாடகர். பாடகி கல்பனா 1000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.
மேலும், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சேனல்களில் ஒளிபரப்பான மியூசிக் ரியாலிட்டி ஷோகளில் நடுவராகவும் இருந்துள்ளார். மேலும், அவர் தனது சிறு வயதில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான புன்னகை மன்னன் படத்தில் சிறிய ரோலில் நடித்துள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications