SIR.. கொத்தாக தூக்கப்படும் வாக்காளர்கள்.. சென்னையில் 10 லட்சம் பேர் நீக்கம்? தேர்தல் முடிவே மாறும்?
சென்னை: தமிழ்நாட்டில் 77 லட்சம் வாக்காளர் கொத்தாக நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மட்டும் 10.40 லட்சம் பேர் வரை நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இறந்தவர்கள், இடமாறியவர்கள், தொடர்பு கொள்ள முடியாதவர்கள், இரட்டை வாக்கு கொண்டவர்கள் என்று 77.52 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. 25.42 லட்சம் பேர் இறந்த காரணத்தால் பெயர்கள் நீக்கப்பட உள்ளன. 5.18 கோடி பேர் இதுவரை SIR படிவங்களை பதிவேற்றி உள்ளனர்.

77 லட்சம் பேர் வரை படிவங்களை வழங்கவில்லை. இடமாறியவர்கள் 39.27 லட்சம் பேர், 8.97 லட்சம் பேர் தொடர்பு கொள்ள முயடியாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற காரணங்களுக்காக 3.32 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளே பல தொகுதிகளில் மாறும் வாய்ப்புகள் உள்ளன.
SIR பணிகள் தமிழ்நாடு
இந்திய தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டித்தது. டிசம்பர் 4-ல் முடியவிருந்த சரிபார்ப்புப் பணி, டிசம்பர் 11 வரை நடக்கும். டிசம்பர் 9-ல் வெளியாகவிருந்த வரைவு வாக்காளர் பட்டியல், டிசம்பர் 16 அன்று வெளியிடப்படும். இதனால், இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 14-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கனமழை போன்ற காரணங்களால் கால நீட்டிப்பு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் இப்பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை ஊழியர்கள் மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரியுள்ளனர். எனினும், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், திட்டமிட்டபடி பணிகளை முடிக்க ஆணையம் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எத்தனை பேருக்கு படிவங்கள்
தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, 6.41 கோடி வாக்காளர்களில் 6.30 கோடி பேருக்கு (98.34%) கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 11 லட்சம் வாக்காளர்களை இன்னும் சென்றடையவில்லை. மொத்த வாக்காளர்களில் 5.22 கோடி படிவங்கள் (81.84%) டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளில், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 68,470 பூத் லெவல் அதிகாரிகள் (BLOs), அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட 2.46 லட்சம் பூத் லெவல் முகவர்கள் (BLAs) மற்றும் 30,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உங்கள் enumeration படிவம் பதிவேற்றப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்ப்பது எப்படி?
உங்கள் பூத் லெவல் அலுவலரிடம் (BLO) படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு அல்லது ஆன்லைனில் பூர்த்தி செய்த பிறகு, அது தேர்தல் ஆணைய போர்ட்டலில் பதிவேற்றப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம். அதற்கு, voters.eci.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில், 'Fill Enumeration Form' என்பதைக் கிளிக் செய்யவும். இது உள்நுழைவு அல்லது பதிவுப் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். 'Sign Up' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண், விருப்பமான மின்னஞ்சல் ஐடி மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு பதிவை முடிக்கவும்.
'Login' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு, பின்னர் 'Request OTP' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உள்நுழைய OTP ஐ உள்ளிடவும். உள்நுழைந்ததும், உங்கள் பெயர் மேலே தோன்றும். மீண்டும் 'Fill Enumeration Form' என்பதைக் கிளிக் செய்யவும். கொடுக்கப்பட்ட பெட்டியில் உங்கள் EPIC (வாக்காளர் ஐடி) எண்ணை உள்ளிடவும். 'Search' என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் படிவத்தின் நிலை உடனடியாகத் தோன்றும். உங்கள் படிவம் பதிவேற்றப்பட்டிருந்தால், "Your form has already been submitted with mobile number XXXXX..." என்ற செய்தி தோன்றும். உங்கள் படிவம் பதிவேற்றப்படாவிட்டால், மேலே உள்ள செய்தி தோன்றாது. மாறாக, ஒரு புதிய படிவப் பக்கம் திறக்கப்படலாம். காண்பிக்கப்படும் மொபைல் எண் தவறாக இருந்தால் அல்லது நீங்கள் சமர்ப்பிக்காத போதிலும் நிலை 'submitted' என்று இருந்தால், உடனடியாக உங்கள் உள்ளூர் BLO ஐத் தொடர்பு கொள்ளவும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications