சிக்கலில் விஜய்.. 5 கோடி விண்ணப்பம் இன்னும் ரிட்டர்ன் வரவில்லை! ஆட்டத்தை கலைத்த SIR.. என்ன நடக்குமோ!
சென்னை: SIR பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் இளைஞர்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. இதுவரை விண்ணப்பம் பெற்றவர்கள் 5 கோடி பேர் வரை விண்ணப்பத்தை நிரப்பி தரவில்லை.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அதில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்று அதிகாரிகள் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சில இடங்களில் மூத்தவர்களுக்கு BLO அதிகாரிகளே ஆவணங்களை நிரப்பி வழங்கி விடுகிறார்கள். ஆனால் மற்ற இடங்களில் நிலைமை இப்படி இல்லை.
முக்கியமாக இளைஞர்களுக்கு சுயமாக விண்ணப்பம் நிரப்ப வேண்டி இருக்கும். இதனால் அவர்கள் விண்ணப்பத்தை வாங்கி வைத்துவிட்டு நிரப்பாமல் அப்படியே உள்ளனர். இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (SIR) தீவிரமாக நடந்து வந்தாலும்.. இன்னும் பலர் நிரப்பிய ஆவணங்களை திருப்பி கொடுக்கவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. சுமார் 1.11 கோடி படிவங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டு, டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன என்று புகார்கள் எழுந்துள்ளன.

ஏற்கனவே இந்த SIR பணிகளுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. இந்த வாக்காளர் திருத்தப் பணி லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்களை நீக்கி, அவர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதிக்கும் என்று கூறி, திமுக உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்றால் என்ன?
வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதற்கும் திருத்துவதற்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது. வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில், ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னதாகவும் அல்லது தேவைப்படும்போதும் ஆணையம் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும். அடிக்கடி ஏற்படும் இடமாற்றங்கள், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாமை போன்ற காரணங்களால், ஒரு வாக்காளர் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதைத் தவிர்க்க இந்தச் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) அறிவிக்கப்பட்டது. தகுதியான யாரும் விடுபடாமலும், தகுதியில்லாதவர்கள் பட்டியலில் இடம்பெறாமலும் இருப்பதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
SIR செயல்முறையின் கால அளவு என்ன?
SIR செயல்பாடு நவம்பர் 4, 2025 அன்று தொடங்கி, பிப்ரவரி 7, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டோடு முடிவடையும்.
SIR-ன் பல்வேறு கட்டங்கள் என்னென்ன?
- வீடுதோறும் கணக்கெடுப்பு: டிசம்பர் 4 வரை
- வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: டிசம்பர் 9
- விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலம்: டிசம்பர் 9 முதல் ஜனவரி 8, 2026 வரை
- அறிவிப்பு கட்டம் (வெளியிடுதல், விசாரணை மற்றும் சரிபார்த்தல்): டிசம்பர் 9 முதல் ஜனவரி 31, 2026 வரை ERO-க்கள் மூலம் கணக்கெடுப்புப் படிவங்கள் மீதான முடிவுகளும், விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகளும் ஒரே நேரத்தில் தீர்வு காணப்படும்.
- இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பிப்ரவரி 7, 2026.
SIR பணிகள் தீவிரம்
நவம்பர் 4 அன்று தேர்தல் ஆணையம் SIR பணிகளைத் தொடங்கியது. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆறு கோடிக்கும் அதிகமான கணக்கெடுப்புப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால், 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுப் பழைய வாக்காளர் பட்டியலில் பெயர்களைக் கண்டறிவதில் உள்ள சிரமங்களால், சுமார் 1.11 கோடி படிவங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டு, டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான வாக்காளர்கள் 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டு பழைய வாக்காளர் பட்டியல்களில் தங்கள் பெயர்களை எளிதில் கண்டறிய முடியாததால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான படிவங்களே திரும்பி வருகின்றன. அந்தப் பழைய பட்டியல்கள் கணினிமயமாக்கப்படாததால், அவற்றைச் சரிபார்க்க கைமுறையாகவே ஸ்க்ரோல் செய்ய வேண்டும்.
குறைந்த படிவங்கள் நிரம்பி உள்ளன
ஒரு பூத் வாக்காளர்கள் லிஸ்டை கொண்ட ஒரு PDF சுமார் ஆயிரம் பெயர்களைக் கொண்டிருப்பதால், வாக்காளர்கள் தங்கள் பெயர் அல்லது குடும்ப உறுப்பினரின் பெயர் உள்ளதா என்று ஒவ்வொரு பதிவையும் சரிபார்க்க வேண்டியுள்ளது. சரியான விவரங்களை பலர் கண்டுபிடிக்க முடியாமல், படிவங்களைச் சரியாக நிரப்ப முடியவில்லை.
இதன் காரணமாக, ஆறு கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகிக்கப்பட்ட போதிலும், ஒரு கோடிக்கும் குறைவான பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களே டிஜிட்டல் மயமாக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்துள்ளன. SIR பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடந்த நவம்பர் 11 அன்று மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்தின.
பாதிக்கும் இளம் வாக்காளர்கள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் காரணமாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிகம் பாதிக்கப்படலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது. இதனால் இளம் வாக்காளர்கள் பலர் பாதிக்கப்பட உள்ளனர். முக்கியமாக இதில் உள்ள விதி ஒன்று இளம் தலைமுறையினருக்கு எதிராக செல்லலாம்.
2002-2004 காலகட்டத்தில் நடத்தப்பட்ட SIR பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இடம்பெற்றிருந்தால், அவர் கூடுதல் ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஆனால், அதற்குப் பிறகு சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் தங்கள் குடியுரிமை மற்றும் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்க வேண்டும். இதனால் இளம் தலைமுறையினர் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் காரணமாக விஜய்க்கு செல்லும் இளம் வாக்காளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால்.. விஜயின் வாக்காளர்கள் பலரும் 2000க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. 2002-2004 காலகட்டத்தில் நடத்தப்பட்ட SIR பட்டியலில் இவர்களின் பெயர்கள் இருந்திருக்காது.
இதனால் இப்போது SIR நடக்கும் நிலையில்.. புதிய வாக்காளர்கள் தங்கள் குடியுரிமை மற்றும் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்க வேண்டும். அதாவது இவர்கள் 12 முக்கியமான ஆவணங்களில் எதையாவது ஒன்றை வழங்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் லிஸ்டில் இருப்பார்கள்.
அதாவது 2002-2004 காலகட்டத்தில் நடத்தப்பட்ட SIR பட்டியலில் உங்களின் பெயர்கள் இல்லை.. அதன்பின்தான் நீங்கள் வாக்காளர்கள் ஆனீர்கள் என்றால்.. கீழ்கண்ட ஆவணங்களை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்களின் வாக்குரிமை பறிக்கப்படும்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications