தெரு தெருவாக களமிறங்கிய தலைகள்.. திமுக மொத்தமாக கண்ட்ரோல் எடுத்துவிட்டது! SIR-ஆல் பாஜகவிற்கு தலைவலி
சென்னை: தமிழ்நாட்டில் SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் மறுஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளில் ஆளும் திமுக தரப்பு தீவிரமாக களமிறங்கி வேலைகளை செய்து வருகிறது. சட்ட ரீதியாக இந்த பணிகளை திமுக எதிர்க்கிறது.
SIR-க்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்து உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் SIR தவறான நோக்கம் கொண்டது என்று திமுக குற்றச்சாட்டு வைத்துள்ளது. தி.மு.க. சார்பில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார், ஜனநாயகத்திற்கு எதிராக S.I.R. மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளது திமுக. இந்த வழக்கு இன்று விசாரணைக்கும் வர உள்ளது.

திமுக எதிர்ப்பு
திமுக இந்த திட்டத்தை கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதோடு இல்லாமல் இதற்கு எதிராக 50+ கட்சிகளை கொண்ட அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தியது. மேலும் S.I.R. நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும்; இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்ட கண்டனத்தில், பாரதிய ஜனதா கட்சியும் (BJP) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (AIADMK) இணைந்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision - SIR) பணிகளைப் பயன்படுத்தி, உழைக்கும் வர்க்கத்தினர், பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
திமுக களப்பணி
ஆனால் ஒரு பக்கம் வழக்கு தொடுத்தால்.. முழுமையாக அதை நம்பிக்கொண்டு இருக்காமல் திமுக கடுமையான கிரவுண்டு வேலைகளை செய்து வருகிறது.
1. திமுகவினர் பூத் வாரியாக வரும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் செல்கின்றனர்.
2. திமுக பூத் ஏஜெண்டுகள், நிர்வாகிகள் BLO அதிகாரிகளுடன் பயணம் செய்து வாக்காளர்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்கின்றனர்.
3. ஒருவர் விடாமல் மக்களை சந்தித்து.. எப்படி பார்ம் நிரப்ப வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும், என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும் என்பதை தீவிரமாக விளக்கி வருகின்றனர்
4. 1 கோடி வாக்குகள் கூட நீக்கப்படலாம்.. என்ற அச்சம் ஆளும் தரப்பிடம் நிலவுகிறது. இதனால் திமுக நிர்வாகிகள் மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளனர். பல மாவட்டங்களிலிருந்தும் வரும் தகவல்கள், திமுக பிரதிநிதிகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் (BLO) வீடு வீடாகச் சென்று வாக்காளர் சரிபார்ப்பில் ஈடுபடுவதைச் சுட்டிக்காட்டுகின்றன. திமுக நிர்வாகிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் வீடு வீடாக சென்று பணிகளை செய்கின்றனர். அதோடு மக்களுக்கு விண்ணப்பத்தை நிரப்புவதில் உதவி செய்கின்றனர்.
பாஜக அப்செட்
இது பாஜக தரப்பையே ஒரு கட்டத்தில் அப்செட்டில் ஆழ்த்தி உள்ளதாம். பீகாரில் இப்படி நடக்கவில்லை. இப்போது SIR நடக்கும் மேற்கு வங்கத்தில்கூட இப்படி நடக்கவில்லை. ஆனால் திமுக மொத்தமாக களமிறங்கிவிட்டது. ஒரு பக்கம் வழக்கும் போட்டுவிட்டு இந்த பணிகளை தீவிரமாகவும் இன்னொரு பக்கம் செய்கிறார்கள்.
2 BLO அதிகாரிகள் போனால் கூடவே 4 திமுக நிர்வாகிகள் மக்களுக்கு உதவ நிற்கிறார்கள். ஆனால் பாஜக, அதிமுக நிர்வாகிகளைத்தான் காணவே இல்லை. திமுக இந்த பணிகளை மொத்தமாக கண்ட்ரோல் எடுத்துவிட்டது என்று பாஜக தலைகள் பலர் புலம்ப தொடங்கி விட்டார்களாம்.












Click it and Unblock the Notifications