SIR.. திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டையில்.. எத்தனை பேரின் பெயர்கள் நீக்கம்?
சென்னை: வாக்காளர் சிறப்பு ஆய்வு திருத்தத்தில் (SIR) நீக்கப்பட்டோர் பட்டியல் தற்போது வெளியாகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்துல 6.19 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் 29.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். காஞ்சிபுரத்தில் 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அங்கே SIRக்கு பின்பு 11,26,924 பேர் அங்கே உள்ளனர்.
SIR என்பது, தகுதியற்ற வாக்காளர்களை நீக்கி, உண்மையான வாக்காளர்களைச் சேர்ப்பதன் மூலம் வாக்காளர் பட்டியலின் உண்மைத்தன்மையை பராமரிக்க, காலங்காலமாக மேற்கொள்ளப்படும் ஒரு விரிவான சரிபார்ப்பு செயல்முறையாகும். கடைசியாக 2002-2004ல் இந்த பணிகள் நடந்தது. இந்த முறை மீண்டும் நடந்துள்ளது.
SIR பணிகள் தமிழ்நாடு
இந்திய தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டித்தது. கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி இந்த பணிகள் தொடங்கியது. தமிழ்நாட்டில் கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. எஸ்.ஐ.ஆர் பணிகளில் தமிழகத்தில் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அதாவது பிஎல்.ஓக்கள் ஈடுபட்டனர். கடந்த வாரம் முடிய வேண்டிய பணிகள் 1 வாரம் நீட்டிக்கப்பட்டு இந்த வாரம் நிறைவு பெற்றது.

தற்போது பதிவேற்றம் செய்யப்பட்ட படிவுகளின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. அதன்பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
முக்கிய மாவட்டங்களில் நீக்கப்பட்டவர்கள் லிஸ்ட்
திருவள்ளூர் மாவட்டத்துல 6.19 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் 29.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
காஞ்சிபுரத்தில் 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அங்கே SIRக்கு பின்பு 11,26,924 பேர் அங்கே உள்ளனர்.
அரியலூரில் 24368 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் . அங்கே SIRக்கு பின்பு 5,06,522 பேர் அங்கே உள்ளனர்.
விழுப்புரத்தில் 182865 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அங்கே SIRக்கு பின்பு 15,44,625 பேர் அங்கே உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் இருந்த 30.30 லட்சம் வாக்காளர்களில் 3.62 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் இருந்த 23.68 லட்சம் வாக்காளர்களில் 3.31 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்
திண்டுக்கல் மாவட்டத்தில் 3.25 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். திண்டுக்கல்லில் 19.34 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், SIRக்கு பின் 16.09 லட்சமாக குறைந்தது
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2.06 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். SIR பணிகளில் தஞ்சை மாவட்டத்தில் 9.84% வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்
கோவையில் எஸ்ஐஆர் பணிகளுக்குப் பின் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். கோவை மாவட்டத்தில் 25,74,608 வாக்காளர்கள் உள்ளனர். இறந்த வாக்காளர்கள் 1,19, 489 பேர், முகவரியில் இல்லாதவர்கள் 1,08,360 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications