Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SIR: இது காலத்தின் கட்டாயம்.. வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்ப்பது அறிவீனம்: இந்து முன்னணி நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் காலத்தின் கட்டாயம் என்றும் இதனை சில கட்சியினர் எதிர்ப்பது அறிவீனம் என்றும் இந்து முன்னணி தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்தை வரவேற்ற இந்து முன்னணி, தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து, போலி வாக்காளர்கள், ஊடுருவல்காரர்கள் ஓட்டுரிமை பெறுவதை தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள், கோவா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களில் ஒரே நேரத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை இந்திய தேர்தல் ஆணையம் துவங்க போகிறது.

SIR Hindu Munnani Special Intensive Revision Voter list

இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான குமரகுருபரன் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆனால், எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன.. பாஜக உள்நோக்கத்தோடு எஸ்ஐஆர் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும், சிறுபான்மையினர், கிறிஸ்தவ மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக கொண்டு வந்துள்ள தாக்குதல் தான் எஸ்ஐஆர் திட்டம் என்றும் விமர்சிக்க துவங்கியிருக்கிறார்கள்.

தேர்தலுக்கு இன்னும் 6 மாதம் உள்ளபோது இப்போதே ஏன் இந்த அவசரம்? மீறி SIR கொண்டு வந்தால் ஒத்துழைக்க மாட்டோம். தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் கூறி வருகிறார்கள்.

பாஜக வரவேற்பு

ஆனால், இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.. பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று எங்களது கருத்தை தெரிவித்துள்ளோம். இந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பாஜக மீது குற்றம் சொல்கிறார். இந்த விவகாரத்தில் வேண்டும் என்றே அவர் மக்களை குழப்புகிறார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக இணையதளத்தில் விரிவாக உள்ளது. பூத் லெவல் அளவில் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். SIR தொடர்பாக வரும் 2ம் தேதி திமுக நடத்தக்கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் டைம் பாஸ் கூட்டம். பக்கோடா சாப்பிடுவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி வரவேற்பு

அதேபோல இந்து முன்னணியும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் காலத்தின் கட்டாயம் என்றும் இதனை சில கட்சியினர் எதிர்ப்பது அறிவீனம் என்றும் இந்து முன்னணி தெரிவித்துள்ளது.

இது குறித்து, அக்கட்சியின் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில், "பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில், 65 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறிந்து நீக்கப்பட்டனர். இறந்தவர்கள், இடம் பெயர்ந்தோர், இரட்டை ஓட்டுரிமை உள்ளவர்கள் நீக்கப்பட்டனர்.

தவறான நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதும் உண்மையான வாக்காளரை பட்டியலில் இருந்து நீக்குவதும் ஜனநாயக விரோதம்.

தேர்தல் கமிஷன்

இதுபோல பல இடங்களில் பல லட்சம் உண்மையான வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்ட செய்திகள் வந்தன. இந்த தீவிர சரிபார்ப்பு காலகட்டத்தில் நமது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை கவனிப்பதும் கூட மக்களின் கடமை. வாக்காளர் பட்டியல் பணி செய்வது மாநில அரசு ஊழியர்கள்.

இதில் முறைகேடு புகார் வரும் போது,தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தவறு செய்வோர் மத்தியில் அச்சம் ஏற்படும்.வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி நடப்பது வழக்கமான நடவடிக்கை.

போலி ஆவணம் ஓட்டுரிமை

சில அரசியல்கட்சிகள் எதிர்க்கக் காரணம் ஊடுருவல்காரர்கள் மற்றும் முறைகேடுக்கு உதவும் போலி வாக்காளர்கள் தான். ஏராளமான சட்டவிரோத வங்கதேச ஊடுருவல்காரர்கள் போலி ஆவணம் வாயிலாக ஓட்டுரிமை பெற்றிருந்தது தெரிந்தது. பீஹார் மாநிலத்தில், தீவிர சரிபார்ப்பு முகாம் வாயிலாக, அத்தகைய வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனால்தான் ராகுல், "ஓட்டு திருட்டு" என்றார்.

தமிழகத்தில் கிராமம் வரை வங்கதேச சட்டவிரோத கும்பல் ஊடுருவியுள்ளது. இது குறித்து தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். சமீபத்தில் கைதான இது போன்ற நபர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தப்பியோடி விட்டனர். தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து, போலி வாக்காளர்கள், ஊடுருவல்காரர்கள் ஓட்டுரிமை பெறுவதை தடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+