Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SIR மூலம் உங்கள் குடியுரிமையே இல்லாமல் போகும்.. கவனம்! உச்ச நீதிமன்றத்தில்.. அனல் பறந்த வாதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஏ.எம். சிங்வி, வாக்காளர் பட்டியல் திருத்தம் தனிநபர் சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பொதுவான முறையில் இதை மேற்கொள்வது சட்டப்படி அனுமதிக்கப்படாது என்றும் வாதிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பான பல மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. SIR நடைமுறைக்கு சவால் விடும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்தது. அக்டோபர் 28 அன்று அறிவிக்கப்பட்ட இந்தச் சிறப்புத் திருத்தத்தின் இரண்டாம் கட்டத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடங்கும்.

SIR You citizenship will be removed due to this arguments in Supreme Court

இந்த SIR நடைமுறைக்கு எதிராக திமுக வழக்கு தொடுத்துள்ளது. கடந்த விசாரணையில் வாக்காளர் பட்டியலை தீவிர சரிபார்க்கும் சிறப்புத் திட்டத்திற்கு (SIR) எதிரான மனுக்கள் குறித்து உச்ச நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (EC) நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது

சிங்கி கடும் வாதம்

இன்று பல்வேறு மனுதாரர்கள் சார்பாக SIR நடவடிக்கைகளுக்கு எதிராக வாதம் வைத்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இடம்பெயர்வு அடிப்படையில் SIR செய்யக்கூடாது. இடம்பெயர்வு என்பது மனித இயல்பு. இடம்பெயர்வு காரணமாக ஒருவரின் வாக்காளர் உரிமை பறிக்கப்படக்கூடாது. இந்தியா நகர்ப்புறம்-கிராமப்புறம் என்று பிரிந்து உள்ளது. இதனால் அடிக்கடி குடியேற்றம், இடமாற்றம் செய்வது இயல்பு. இதை வைத்து வாக்காளர் பிழைகளைச் சுட்டிக்காட்டி, நாடு/மாநில அளவிலான SIR பணியை நியாயப்படுத்த இயலாது.

தேர்தல் ஆணையம் குடிமக்களைத் தங்களின் குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளி உள்ளது. வாக்காளர் அடையாளத்தை நிரூபணம் செய்வதை விட குடியுரிமையை நிரூபணம் செய்வதில் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.வெளிநாட்டுக் குடியுரிமை மட்டுமே சந்தேகத்தை உண்டாக்கும். ஆனால் இங்கே விலாசம் மாறி இருந்தால் கூட அவர்களின் வாக்குரிமை பாதிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட உங்களின் குடியுரிமையை நீக்குவது போல செயல்படுகிறார்கள்.

கடுமையான வாதம் - SIR வழக்கம்

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், பிரிவு 21(3)-இன் படி, சிறப்பு திருத்தம் ஒரு குறிப்பிட்ட தொகுதி அல்லது அதன் பகுதிக்கு மட்டுமே பொருந்தும். இது தேசிய அல்லது மாநில அளவிலானதாக இருக்க முடியாது. ஒரு தொகுதி என்பதை அனைத்துத் தொகுதிகள், என விரிவுபடுத்த இயலாது என சிங்வி விளக்கினார்.

வழக்கறிஞர் பிருந்தா குரோவர் வைத்த வாதத்தில், SIR ஆனது பல தலைமுறைகளின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் அபாயத்தை உருவாக்குகிறது. வெறும் சந்தேகம் வாக்களிக்கும் உரிமையைப் பறித்து, குடியுரிமையற்ற நிலைக்கு வழிவகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது அரசியலமைப்பின் நோக்கத்தையே தகர்க்கும் என்று வாதம் வைத்தார்.

பிரசாந்த் பூஷண் வைத்த வாதத்தில்

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், SIR என்பது வாக்காளர் பட்டியல் பராமரிப்பல்ல, குடியுரிமை சரிபார்ப்பு முறையாகவே மாறிவிட்டது. உங்கள் குடியுரிமையையே இதை வைத்து மறைமுகமாக தீர்மானிக்கிறார்கள். புதிய வாக்காளர் பட்டியலை உருவாக்குவது முன்மாதிரி இல்லாத பணி. இயந்திரம் படிக்கக்கூடிய பட்டியல்கள் கொடுங்கள் என்று கேட்கிறோம். ஆனால் மிஷின் ரீடிங் பார்மட்டில் கொடுக்க மறுக்கிறார்கள். இதில் வெளிப்படைத்தன்மை மறுக்கப்பட்டது பல சந்தேகங்களை எழுப்புகிறது.

படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான அவசர காலக்கெடுவை கொடுத்துள்ளனர். இதனால் பலர் படிவங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்படும், என்று பிரஷாந்த் பூஷண் வாதம் வைத்துள்ளார்.

இவ்வாதங்களின் போது, தலைமை நீதிபதி, பிரசாந்த் பூஷணை தனது வாதங்களை பதிவு செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களுடன் கட்டுப்படுத்தக் கேட்டுக்கொண்டார், வரம்பை விரிவாக்க வேண்டாம் என்றார். நீதிபதி பக்ஷி, வாக்காளர் பதிவு விதிகள் பிரிவு 25இன் நடைமுறையை தேர்தல் ஆணையம் பின்பற்ற வேண்டுமா அல்லது SIRன் நடைமுறைத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் அதிகாரம் உள்ளதா என்று சிங்வியிடம் வினவினார். இதற்கு சிங்வி SIRன் நடைமுறைத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க முடியாது என்று பதில் அளித்தார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+