சிறுசேரி - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்படுதா? இதுதான் மாற்று வழி? சென்னை மெட்ரோ அதிரடி
சென்னை: சிறுசேரியில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு செய்யும் திட்டம் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல, பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் விமான நிலையம் வரையிலும், கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவது தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் மெட்ரோ சேவை ஆரம்பிக்கப்பட்டு, இப்போது வரை பயணிகளின் பெருவாரியான ஆதரவை பெற்று வருகிறது. அதற்கேற்றபடி சென்னை மெட்ரோ வெற்றிகரமாக இயக்கப்பட்டும் வருகிறது.

சென்னை: அதனால்தான், சென்னையில் மெட்ரோ சேவையில் பயணம் செய்ய பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.. சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோவால் இணைக்கும் பணியும் மறுபக்கம் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது..
அந்தவகையில், பல்வேறு கட்டங்களாக மெட்ரோ பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதாவது, 45-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டப்பாதை பணி, சுரங்கப்பாதை பணி, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி உட்பட பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
சிறுசேரி: இப்படிப்பட்ட சூழலில், மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ன்படி, வழித்தடம் 5-ல் கோயம்பேடு முதல் ஆவடி வரை மற்றும் வழித்தடம் 3-ல் சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்டது.
குறிப்பாக, வழித்தடம் 3-ல் சிறுசேரி முதல் கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை, 23.5 கிமீ நீளத்திற்கு தோராயமாக 12 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் 5,458.06 கோடி ரூபாய் செலவில் நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
வழித்தடம்: ஆனால், 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை நீட்டிப்பது, 5-வது வழித்தடத்தில் கோயம்பேட்டில் இருந்துஆவடி வரை நீட்டிக்கப்பட உள்ள நிலையில், 3-வது வழித்தடத்தில் சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு தற்போது ஒப்புதல் அளிக்கவில்லையாம்.
எனினும், இந்த நீட்டிப்பு திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறுசேரி: சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக திருப்போரூர் வரை நீட்டிப்பது, தேவைப்பட்டால் மகாபலிபுரம் வரை நீட்டிப்பு செய்வது தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதில் பஸ்களை இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
சிறுசேரி – கிளாம்பாக்கம் இடையே, கேளம்பாக்கம் வழியாக மெட்ரோ ரயில் பாதை அமைக்க, மெட்ரோ ரயில் சேவைக்கு பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாலும், இந்த வழித்தடத்தை ஒட்டி போதிய கல்வி நிறுவனங்களோ, அலுவலகங்களோ என்பதாலும், இந்த திட்டம் கைவிடப்பட்டு அதற்கு பதிலாக, பஸ்களை இயக்க, மெட்ரோ ரயில் பரிந்துரைத்துள்ளதாம்.
புதிய பேருந்து முனையம்: புதிய பேருந்து முனையத்தில், ஏர்போர்ட்டிலிருந்து மெட்ரோ ரயில் இணைப்பு இருக்கும்... சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) கணிசமான தொழில்துறை மற்றும் குடியிருப்பு வளர்ச்சிகளைக்கொண்ட கேளம்பாக்கம் வழியாக மாமல்லபுரத்தை நோக்கி மெட்ரோ ரயில் விரிவாக்க பாதையின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யவும் பரிந்துரைத்துள்ளது..
இதைத்தவிர, சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக திருப்போரூர் வரை மாற்று வழியில் நீட்டிப்பு செய்வது தொடர்பான யோசனையும் முன் வைக்கப்பட்டுள்ளது.
மற்ற 2 வழித்தடங்களை நீட்டிப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, ஆலோசனை நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருவதாகவும், இன்னும் 2 மாதத்தில் ஆலோசனை நிறுவனங்கள் தேர்வு செய்து, அடுத்த 6 மாதத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பூந்தமல்லி: இதனிடையே, பூந்தமல்லியிலிருந்து புதிதாக வரவிருக்கும் பரந்தூர் விமான நிலையம் வரையிலும், கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவது தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications