சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினை சந்தித்தார் சீதாராம் யெச்சூரி.. லோக் சபா தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை!

திமுக தலைவர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னையில் இன்று சந்தித்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று ஸ்டாலினை சந்திக்கிறார் சீதாராம் யெச்சூரி- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னையில் இன்று சந்தித்தார்.

    இந்தியா தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக தயாராகிக் கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜகவிற்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்.

    Sitaram Yechury to meet Stalin today amidst Mega Alliance plan for 2019

    பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டும் வகையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள், திமுக என்று பல கட்சி தலைவர்களை சென்று சந்திரபாபு நாயுடு பார்த்தார். இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இன்று திமுக தலைவர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னையில் இன்று சந்தித்தார்.

    சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்திப்பு நடந்தது. நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இதில் ஆலோசனை செய்து இருக்கிறார்கள்.

    அதேபோல் தமிழகத்தில் நடைபெற உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்தும் விவாதித்து இருக்கிறார்கள். தேசிய அளவிலான கூட்டணி எப்படி அமைக்கப்படும், யார் இதை வழிநடத்துவது என்று பல விஷயங்களை இதில் விவாதித்து இருக்கிறார்கள்.

    இது இல்லாமல் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி பொதுக்குழு கூட்டம் இன்றும் நாளையும் நடக்கிறது. இதிலும் கலந்து கொள்ள இருக்கிறார் சீதாராம் யெச்சூரி.

    English summary
    Sitaram Yechury to meet Stalin today amidst Mega Alliance plan for 2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X