Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் சிவாஜி கணேசன் சிலை.. திருச்சியில் வேறு இடத்தில் திறக்க நடவடிக்கை.. சட்டசபையில் அமைச்சர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை தக்க இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு விரைவில் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சாமிநாதன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் , திருச்சிராப்பள்ளி பாலக்கரை பிரசாத் திரையரங்கம் அருகில் நிறுவப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை திறக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என கேள்வி எழுப்பினார்.

Sivaji Ganesan Statue Relocated to Rightful Place in Trichy to Be Opened Soon Minister Saminathan

திருச்சியில் சிவாஜி சிலை

அதற்கு பதிலளித்து பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.ப. சாமிநாதன், திருச்சி பாலக்கரை பிரசாத் திரையரங்கம் அருகில் ஏற்கனவே சிவாஜி கணேசனுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது என்றும் அதற்கான காரணம் உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் எனவும் கூறினார்.

பொது இடத்தில் சிவாஜி கணேசன் சிலை இருப்பதால் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்துடன் கலந்து பேசி, சிவாஜி கணேசன் சிலை மக்கள் பார்க்கும் இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு விரைவில் திறக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார்.

அமைச்சர் கேஎன் நேரு

இதையடுத்து, இதுதொடர்பாக பேசிய அமைச்சர் கே.என்.நேரு, திமுக ஆட்சியில் திருச்சி பாலக்கரையில் வைக்கப்பட்ட சிவாஜி கணேசன் சிலை உச்சநீதிமன்ற தீர்ப்பாலும், அரசியல் காரணங்களாலும் கடந்த ஆட்சியில் திறக்கப்படாமலேயே இருந்தது.

எனவே தற்போது சிவாஜி சிலையை திருச்சியில் வேறு இடத்தில் நிறுவுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் திருச்சியில் ஏதேனும் ஒரு பூங்காவிற்கு சிவாஜி கணேசனின் பெயர் சூட்டப்பட உள்ளது. பின்னர் அந்தப் பூங்காவில் சிவாஜி சிலையை வைத்து இந்த ஆண்டுக்குள் திருச்சியில் சிவாஜி சிலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

திருவாரூரில் சிவாஜி கணேசனுக்கு சிலை?

சிவாஜி கணேசனின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் அவருக்கு சிலை அமைக்க அரசு முன்வருமா? என திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், "சிவாஜி கணேசனுக்கு சென்னையில் சிலை உள்ளது, திருச்சியில் சிலை திறக்கப்பட உள்ளது. பூண்டி கலைவாணனின் கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+