சிவாஜியின் ‘அன்னை’ இல்லம்.. உதவாத இளைய மகன்! மூத்த மகனுக்கு எதுவும் இல்லை? நீதிமன்றம் போட்ட ஆர்டர்
சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர்.
பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை செலுத்த ஏதுவாக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி மத்தியஸ்தர் கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அன்னை இல்லத்தின் மீது ராம்குமாருக்கு எந்த உரிமையும் அல்லது பங்கும் இல்லை எனக்கூறினார். இதனையடுத்து, அன்னை இல்லத்தின் மீது தனக்கு தற்போது, எந்த உரிமையும், எந்த பங்கும் இல்லை எனவும் எதிர்காலத்திலும் அவ்வாறு எந்த உரிமையும் கோரமாட்டேன் எனவும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.
ராம்குமார் யார்?: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபுவை அனைவருக்கும் தெரியும். அவரது மூத்த மகன் ராம்குமார் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருந்திருக்கிறார். குறிப்பாக சங்கரின் ஐ படத்தில் தொழிலதிபர் வேடத்தில் நடித்திருந்தது ராம்குமார் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிக்க வருவதற்கு முன்பே ராம்குமாரின் மகன் துஷ்யந்த் நடிகராக அறிமுகம் ஆனார். ஜூனியர் சிவாஜி என்ற பெயரில் அவர் சில படங்களில் நடித்த போதும் எந்த படமும் கை கொடுக்கவில்லை. அதற்கு பிறகு சினிமா துறையில் இருந்து ஒதுங்கிய அவர் திரைப்பட தயாரிப்பு விநியோகம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார்.
அதிலும் நஷ்டம் ஏற்படவே தனது தந்தை மற்றும் சித்தப்பாவின் சிவாஜி ப்ரொடக்சன்சில் பணிபுரிந்து வந்தார். பிறகு தனியாக படம் தயாரிப்பதாக சில சிக்கல்களில் சிக்கி அன்னை இல்லத்தை ஜப்தி செய்வது வரை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications