சிவகாசியில் வெடித்தது குஷியோ குஷி! சரவெடிக்கு ரூல்ஸ்.. 25-ல் இருந்து 5 சரம்.. உச்சநீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி நெருங்கும் நிலையில், பட்டாசு தொழிலுக்கும் பட்டாசு பிரியர்களுக்கும் முக்கியமான ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. பட்டாசுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை கோரிய வழக்கில், புதிய தலைமுறை பசுமை பட்டாசுகளுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது... இதனால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.. இந்த தீர்ப்பையும் வரவேற்றுள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு அர்ஜுன் கோபால் உள்ளிட்ட 3 சிறுவர்கள் சார்பில், பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசு மற்றும் அதனால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்படும் உடல்நல பாதிப்பை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Sivakasi Crackers Rules Supreme Court Verdict Diwali Crackers

பட்டாசுகள் கட்டுப்பாடுகள்

இந்த வழக்கில் 2018-ல் பட்டாசுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், குறைந்த மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசு என்ற புதிய முறையும் அறிமுகமானது. அதன்பிறகு டெல்லி என்சிஆரில் பட்டாசு பயன்பாடு தொடர்பாக பல்வேறு தடைகளும், கட்டுப்பாடுகளும் தொடர்ந்து வந்தன.

இந்நிலையில், பட்டாசுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை கோரிய இந்த வழக்கில், தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பிரசன்னா பி.வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு புதிய தலைமுறை இணைக்கப்பட்ட பசுமை பட்டாசுகளான சரவெடிகளை குறிப்பிட்ட விதிமுறைகளுடன் தயாரித்து விற்பனை செய்ய அனுமதி அளித்தது.

சரவெடிக்கு புதிய ரூல்ஸ்

இதில் சரவெடி தொடர்பான மாற்றம் முக்கியமானது... வழக்கமான சரவெடியில் ஒரு நொடிக்கு 25 சரங்கள் வெடிக்கும் நிலையில், புதிய தலைமுறை சரவெடியில் ஒரு நொடிக்கு 5 சரங்கள் மட்டுமே வெடிக்கும். இந்த புதிய வகை பட்டாசுகளில் மாசு வெளியேற்றமும் குறைக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பசுமை பட்டாசுகளால் மாசு 30 முதல் 40 சதவீதம் வரை குறையலாம் என்றும், புதிய தலைமுறை வகைகளில் சில மாசு வெளியேற்றங்கள் 45 முதல் 60 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதற்காக எல்லா பட்டாசுகளுக்கும் முழுமையான அனுமதி கிடைத்துவிட்டது என்று அர்த்தமில்லை. அங்கீகரிக்கப்பட்ட மூலப்பொருள் கலவை, சத்தம், மாசு மற்றும் பாதுகாப்பு விதிகளை உற்பத்தியாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்...

பச்சை நிற ஒளிக்காக பாரியம்

பச்சை நிற ஒளிக்காக பாரியம் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தும் பசுமை பட்டாசுகள் தொடர்பான முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை. டெல்லி, போபால், கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் கள ஆய்வு நடத்தி முடிவுகளை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அக்டோபர் 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த வருடம் பசுமை பட்டாசுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டும், நடைமுறையில் பல வகையான பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.. பசுமை பட்டாசுகளை சாதாரண பட்டாசுகளிலிருந்து களத்தில் அடையாளம் காண்பதும் சவாலாக இருந்தது. போலி லேபிள்கள், சான்றிதழ் அல்லது க்யூ ஆர் குறியீடு இல்லாத பெட்டிகளும்கூட பிரச்சினையாகவே இருந்தன.

அதனால்தான், டெல்லியில் பட்டாசுகளை 24 மணி நேரமும் வெடிக்க அனுமதிக்க முடியாது என்றும் இப்போது சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கான நேரக் கட்டுப்பாடுகளும் தனியாக வர உள்ளன.

சிவகாசி குஷியோ குஷி

இதனிடையே, இந்த தீர்ப்பை சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்... சங்கத் தலைவர் ப.கணேசன் இதுகுறித்து சொல்லும்போது, "இது இந்திய பட்டாசுத் தொழிலுக்கு முக்கிய மைல்கல், பல ஆண்டுகளாக நடந்த அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளுக்கு கிடைத்த அங்கீகாரம். நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட சிவகாசி தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு இந்த தீர்ப்பு மிக முக்கியமானது" என்று வரவேற்பு தெரிவித்தள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+