கொளுத்தி எடுத்த பட்டாசு விற்பனை.. சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.7,000 கோடிக்கு வர்த்தகம்!
சென்னை: சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை கடந்த ஆண்டு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையான நிலையில் இந்தாண்டு கூடுதல் விற்பனை ஆகியுள்ளதாக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. புதுப்புது பட்டாசு ரகங்களுக்கு சிறுவர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியில் பட்டாசுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புத்தாடை, இனிப்பு, வித விதமான உணவு வகைகளுடன், பட்டாசுகள் இல்லாத தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டமே கிடையாது. சிறுவர்கள், சிறுமியர் மட்டுமல்லாது பெரியவர்களும் பட்டாசுகளை வெடித்து மகிழ்வது வழக்கம்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசுக்கு பெயர்போன சிவகாசிக்கு வெளியூர் மக்கள் படையெடுத்து பட்டாசுகள் வாங்கி சென்றனர். சிவகாசி, சாத்தூர், விருதுநகர் பகுதிகளில் பட்டாசுகள் வாங்க வெளியூர் வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி பட்டாசு கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து தங்களுக்கு தேவையான பட்டாசு ரகங்களை தேர்ந்தெடுத்து வாங்கிச் சென்றனர்.
ஆன்லைன் மூலமாக பட்டாசு விற்பனை நடைபெற்று வந்தாலும், ஏராளமான மக்கள் பட்டாசுக் கடைகளுக்கு நேரில் வந்து தங்களுக்குப் பிடித்தமான பட்டாசுகளை ஆன்லைன் வர்த்தக விலையை விடவும், குறைந்த விலைக்கு சிவகாசி பட்டாசுக் கடைகளில் வாங்கிச் சென்றனர்.
இந்த ஆண்டு வழக்கமான பட்டாசு ரகங்களுடன், புது வகையான பட்டாசு வகைகளும் ஏராளமான சந்தையில் விற்பனைக்கு வந்ததால், புதுப்புது பட்டாசுகளை சிறுவர்- சிறுமியர்கள்- இளைஞர்கள்- பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சீசனக்காக புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கான புதிய ரக பட்டாசுகளான பீட்சா, வாட்டர் மெலன், ஓரியோ பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நினைவுபடுத்தும் வகையில் பட்டாசுகளும், குழந்தைகளுக்காக கதாயம், வேல், கிட்டார், சிலிண்டர் உள்பட 30க்கும் மேற்பட்ட பல புது ரக பட்டாசுகளும் விற்பனை செய்யப்பட்டன.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிவகாசியில் இந்த ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனையாகியுள்ளதாக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரூபாய் 6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையான நிலையில் அதை விட, பட்டாசு விற்பனை நடப்பு ஆண்டு ரூபாய் 1000 கோடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications