போக்சோ உள்ளிட்ட 9 வழக்குகளில் சிக்கிய சிவசங்கர் பாபா.. 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.. கோர்ட் உத்தரவு
சென்னை: போக்சோ உள்ளிட்ட 9 வழக்குகளில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை, 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க செங்கல்பட்டு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் தன்னை கடவுள் என என்று கூறிக் கொண்டு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
சுஷில் ஹரி பள்ளி மாணவிகள் பலர் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர். அதன்பேரில் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிறிது நாட்களிலேயே சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
போலீசார் தேடுவதை அறிந்த சிவசங்கர் பாபா வெளிநாட்டுக்கு தப்ப முயன்றனார். டேராடூனில் இருப்பதை அறிந்து, சிவசங்கர் பாபாவை பிடிக்க போலீசார் விரைந்தனர். ஆனால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிவசங்கர் பாபா அங்கு இருந்து தப்பினார். தலைநகர் டெல்லியில் வைத்து அவரை கடந்த ஜூன் 16ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் சிவசங்கர் பாபா
அதன்பின்னர் சென்னைக்கு அழைத்து வந்த சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு மஹிலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அதன்பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி, அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உடல் நிலை பாதிப்பு
இந்த நிலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததால் சிவசங்கர் பாபாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் முதலில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். .
Recommended Video

10 நாட்கள் காவல்
மீண்டும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிவசங்கர் பாபாவை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

சிவசங்கர் பாபாவிடம் விசாரணை
இந்த மனு மீதான விசாரணை இன்று செங்கல்பட்டு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவை, 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் சிபிசிஐடி போலீசார் அவரை அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளி வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications