சம்பவம் 5+ 1.. அதில் ஒன்று திமுகவினருக்கே சர்ப்ரைஸ்.. தைரியமாக ஸ்டாலின் எடுத்த முடிவு
சென்னை: திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், லோக்சபா தேர்தலுக்கான தொகுதி மற்றும் வேட்பாளர்கள் தேர்வில் ஐந்து பெரிய சம்பவங்களை செய்திருக்கிறார்.. அதை சீனியர்களே ஆச்சர்யத்துடன் பார்க்கும் நிலையில், ஆறாவதாக ஒரு சம்பவமும் செய்திருக்கிறார். அதுதான் இப்போது பெரிய பேசுபொருளாகி உள்ளது.
தமிழகத்தில் திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலின், வழக்கத்தைவிட அதிக உற்சாகத்துடன், தைரியத்துடனும் இந்த முறை லோக்சபா தேர்தலை அணுகுகிறார்.. கடந்த 2014ம் ஆண்டு தேர்தலை எப்படி அசாத்தியமான உணர்வுடன் ஜெயலலிதா அணுகிறாரோ அதேபோன்ற நிலைப்பாட்டுடன் ஸ்டாலின் இன்று தேர்தலை அணுகுவதாக தெரிகிறது.

சம்பவம் ஒன்று: அதேநேரம் மொத்தமாக திமுக சார்பில் வேட்பாளர்களை 40 தொகுதியிலும் நிறுத்தாமல், கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை விட்டுக்கொடுத்துள்ளார். காங்கிஸ் கட்சிக்கு 10 இடங்களை கொடுத்தது திமுகவினருக்கே பெரிய ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது.
சம்பவம் இரண்டு: திமுக கூட்டணியில் இந்த முறை தொகுதி ஒதுக்கீட்டில் யாரும் எதிர்பாராதவிதமாக எளிதில் வெல்லக்கூடியதாக கருதப்படும் திண்டுக்கல் மற்றும் நெல்லை தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு தூக்கி கொடுத்திருக்கிறார். குறிப்பாக திண்டுக்கல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கொடுப்பார் என்பதை திமுகவினரே நம்பவில்லை..
சம்பவம் மூன்று: அதேபோல் யாரும் நம்ப முடியாத ஒன்றாக தேனி மற்றும் கோவை தொகுதியில் இந்த முறை தைரியமாக களம் இறங்க உள்ளது திமுக. கோவையும், தேனியும் திமுக நேரடியாக போட்டியிட்டு வென்றது 1996ல்தான் என்பது தான் காரணம்.
சம்பவம் நான்கு: இப்போது திமுக வேட்பாளர் தேர்வுக்கு வருவோம்.. திமுக வேட்பாளர் தேர்வில் இந்த முறை 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேனியில் தங்கத்தமிழ்செல்வன், கோவையில் கணபதி ராஜ்குமார், ஈரோடு பிரகாஷ், பொள்ளாச்சியில் கே.ஈஸ்வரசாமி, தர்மபுரியில் அ மணி, ஆரணி தொகுதியில் எம்எஸ் தரணி வேந்தன், கள்ளக்குறிச்சி தொகுதியில் ஏ மலையரன், தஞ்சையில் முரசொலி, பெரம்பலூரில் அருண் நேரு உள்பட மொத்தம் 11 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் ஐந்து: இந்த முறை பொன்முடி மகன் கௌதம் சிகாமணிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை..அதேபோல் தர்மபுரி தொகுதியின் தற்போதைய எம்பியான செந்தில்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.. கோவையில் மகேந்திரன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்குமே வாய்ப்பு வழங்கப்படவில்லை.. அதேபோல் தஞ்சையில் பழனி மாணிக்கத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.. மேலும் திருவண்ணாமலை தொகுதியில் எவ வேலு மகனுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சம்பவம் ஆறு: திமுக சார்பில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவுக்கு பெரம்பலூர் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது திமுகவினருக்கு ஆச்சர்யமாக உள்ளது. ஏனெனில் பெரம்பலூர் தொகுதியில் ஐஐகே சார்பில் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நேருவின் மகனை இறக்கி இருப்பது தான் பேசுபொருளாகி உள்ளது. திருச்சி தொகுதியை திமுக கூட்டணி கட்சியான மதிமுகவிற்கு கொடுத்துவிட்டது. இதனால் கேஎன் நேரு மகனுக்கு பக்கத்தில் உள்ள பெரம்பலூர் தொகுதி கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அதேபோல் இந்த முறை வேட்பாளர்கள் தேர்வில் பாதிக்கு பாதி உதயநிதியின் பங்கு இருந்ததாகவும், திமுக இளைஞர்களை மையப்படுத்தி செல்ல ஸ்டாலின் விரும்புவதாகவும் அதற்காகவே இந்த தைரியமான முடிவுகளை எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications