சென்னையில் வேளச்சேரி, தரமணி, பெருங்குடி.. ஆறு பறக்கும் ரயில் நிலையங்கள் அடியோடு மாறுது
சென்னை: பறக்கும் ரயில் வழித்தடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள ஆறு ரயில் நிலையங்களை மேம்படுத்த இருக்கிறது. இந்திரா நகர், கஸ்தூரிபா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி மற்றும் வேளச்சேரி ஆகிய நிலையங்களில் சிறந்த பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் லிஃப்ட், எஸ்கலேட்டர்கள் போன்ற வசதிகளைப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
சென்னையின் மிகவும் காஸ்ட்லியான பகுதி என்றால், அது கடற்கரையை ஒட்டியுள்ள தென்சென்னை பகுதிகள் தான். குறிப்பாக செல்வது என்றால், மந்தைவெளி, மயிலாப்பூர், சந்தோம், பட்டினம்பாக்கம், அடையாறு, எம்ஆர்சி நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, நீலாங்கரை, வேளச்சேரி, கிண்டி, நந்தனம், கோட்டூர்புரம், ராஜா அண்ணாமலைபுரம், சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகள் தான்.

இங்கு தான் ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்துளளன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில், வேலை செய்ய இங்கு தான் வருகிறார்கள். இதன் காரணமாக பறக்கும் ரயில் வழித்தடத்தில் லட்சக்கணக்கான மக்கள் தினமும் வந்துசெல்கிறார்கள். அப்படி வந்து செல்லும் ரயில் வழித்தடத்தில் ரயில்கள் நிலையங்கள் எல்லாமே பாழடைந்த பங்களா போல் தான் இருக்கும்.
எந்த ரயில் நிலையமும் சரியான பராமரிப்புடன் இருக்காது. அந்தரயில் நிலையங்கள் எல்லாவற்றையும் முறையாக பராமரித்து வணிக வளாகம் போல் அல்லது மால் போல் மாற்றினால், ரயில்வேக்கு மிகப்பெரிய வருவாய் வரும். இதனை உணர்ந்த சென்னை மெட்ரோ நிறுவனம், பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை அதிநவீன முறையில் மேம்படுத்த போகிறது.
முதற்கட்டமாக பறக்கும் ரயில் வழித்தடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள ஆறு ரயில் நிலையங்களை மேம்படுத்த இருக்கிறது. இந்திரா நகர், கஸ்தூரிபா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி மற்றும் வேளச்சேரி ஆகிய நிலையங்களில் சிறந்த பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் லிஃப்ட், எஸ்கலேட்டர்கள் போன்ற வசதிகளைப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
புதிய ரயில்களை வாங்குவதற்கும், பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள பணிமனை மற்றும் பராமரிப்பு புனரமைப்பதற்கும் சிஎம்ஆர்எல் டெண்டர்களை வெளியிட உள்ளது. ரயில்வேயிடம் இருந்து எம்ஆர்டிஎஸ்-ஐ சிஎம்ஆர்எல்-க்கு மாற்றுவதற்காக ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
சென்னையில் வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை உள்ள ரயில் வழித்தடத்தில் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் எப்போது வேண்டுமானாலும் பரங்கிமலை வரை வேளச்சேரி ரயில்கள் எல்லாம் நீட்டிப்பு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. ரயில்களை இயக்கலாம் என்று தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சான்றிதழ் கிடைத்ததும் ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டால், வடபழனி வழித்தட மக்கள், தாம்பர வழித்தட மக்கள்,மயிலாப்பூர் வழித்தட மக்கள் எளிதாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்னை முழுக்க ரயிலிலேயே சென்றுவிட முடியும். பல வருட காத்திருப்பும் முடிவுக்கு வரும். வேளச்சேரி பரங்கிமலை ரயில் ஓடும் நாள் தான் சென்னைக்கு உண்மையில் அன்று தான் சிறப்பான நாளாக இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications