5 அடி உயரம்.. கொந்தகை அகழாய்வில் கிடைத்த மனித எலும்பு கூடு.. வாழ்ந்த காலகட்டம் பற்றி ஆய்வு தீவிரம்
சென்னை: சிவகங்கை மாவட்டம், கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாராய்ச்சியில் முழு உருவ மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ளது கொந்தகை. கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வு நடந்து வரும் நிலையில், அத்தோடு அருகேயுள்ள கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய இடங்களுக்கும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு இங்கும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

கொந்தகையில் அடுத்தடுத்து 4 குழந்தைகளின் எலும்புக்கூடுகள், ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. எனவே, கிடைத்த பொருள்களைக் கொண்டு இந்த இடம் அந்த காலகட்டத்தில், சடலங்களை புதைக்கப் பயன்படும் இடுகாடாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கொந்தகையில் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழியிலிருந்து 5 அடி நீளமுள்ள முழு உருவ மனித எலும்புக்கூடு நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த எலும்புக் கூடு 183 செ.மீ. நீளத்திலும், 35 செ.மீ. அகலத்திலும் உள்ளது. சேதம் ஏற்படாமல் ரொம்ப ஜாக்கிரதையாக எலும்புக்கூட்டை, தொல்லியல் ஆய்வாளா்கள் எடுத்து சுத்தம் செய்து, ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த எலும்புக் கூடுகளின் பாலினம், வயது, வாழ்ந்த காலம் போன்றவை குறித்து ஆய்வுக்குப்பின்னரே தெரியவரும் என்று, தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications