ஜி.எஸ்.டி., வருமான வரி தொழில் நுட்பம் குறித்து இளைஞர்களுக்கு திறன் பயிற்சி.. எப்படி விண்ணப்பிப்பது?

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரி தொழில் நுட்பம், தொழில் உற்பத்தி, டிஜிட்டல் திறன் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஆரி எம்பிராய்டரி, ஜவுளி கையால் அச்சிடுதல், விமான நிலைய வாடிக்கையாளர் சேவை, உணவு தயாரிப்பு போன்ற பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அவ்வப்போது அளிக்கப்படுகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமானநிலையத்தில் பணிபுரிய வாடிக்கையாளர் சேவை பயிற்சியும் ஒரு முறை வழங்கப்பட்டது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் அரசு செயல்படுத்தப்படுகின்றன. படித்து முன்னேறி நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அரசு தருகிறது.

Skill training for youth on GST and Income Tax technology How to apply

அந்த வகையில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் வழங்கப்பட உள்ள புதிய திறன் பயிற்சி பற்றி தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்படுகிறது.

அதன்படி தற்போது தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரி தொழில் நுட்பம், தொழில் உற்பத்தி, டிஜிட்டல் திறன் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த 21 முதல் 30 வயது வரை உள்ளவர்கள், 2021-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்புக்கு வழி வகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 55 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவு தாட்கோ மூலம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+