இளையராஜா இதில் வெல்வாரா, தோற்பாரா என்பது வேறு விஷயம்.. ஆனால்? எஸ்கேபி கருணா உருக்கமான பதிவு
சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் அனுமதியின்றி குணா பட பாடலை பயன்படுத்தியதாக கூறி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதால் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரபல எழுத்தாளர் எஸ்கேபி கருணா, இளையராஜாவை ஆதரித்து பதிவிட்டுள்ளார்.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் அனுமதியின்றி குணா பட பாடலை பயன்படுத்தியாக கூறி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன்... பாடலை படத்தில் பயன்படுத்தியதற்காகவும், அதற்கு முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இளையராஜாவின் வழக்கறிஞர் சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் படத்தில் இருந்து பாடலை நீக்க வேண்டும் என்றும் நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இளையராஜாவிற்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக பணம் வாங்கி கொண்டு இளையராஜா பாடலை இசைத்துள்ள நிலையில், அதற்கு உரிமை கோர முடியாது என குரல்கள் அதிகமாக எழுந்துள்ளன. அதேநேரம் இசையை உருவாக்கியவர் என்ற முறையில் அது படைத்தவருக்கே சொந்தம் என்று இளையராஜாவுக்கு ஆதரவாகவும் வாதிடுகிறார்கள். இந்நிலையில் பிரபல எழுத்தாளர் எஸ்கேபி கருணா, இளையராஜாவை ஆதரித்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "முதல்முறையாக இதை நான் பேசுகிறேன்..
யுவன், அனிருத், ச.நா ஏன், முந்தாநாள் இசையமைக்க வந்தவனிடம் கூட இந்த தயாரிப்பாளர், cook,.dish லாஜிக் எல்லாம் பேச முடியாது. ஏன்? அவர்கள் போடும் காண்டிராக்ட் அப்படி! அவர்கள் பணம் வாங்கி இசையமைக்கும் படத்திலேயே அவர்களின் பாடலை எத்தனை முறை, எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது வரையில் ஒப்பந்தம் போட்டு விடுகின்றனர். நான் தான் பாடினேன், நான் தான் தபேலா வாசித்தேன், மிக்சிங் பண்ணேன் என்றெல்லாம் ஒருத்தரும் அவர்களிடம் உரிமை கோரி வர முடியாது. ஏனெனில், அவர்களிடமும் ஒப்பந்தம் வாங்கப்படுகிறது.
இளையராஜா விஷயம் வேறு! அவர் முந்தைய தலைமுறை.
பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அவரிடம் அடம் பிடித்து வாங்கிய பாடலையே படத்தில் பயன்படுத்த சிச்சுவேஷன் இல்லாமல் டைட்டில் ஓடும்போது போட்டு வீணடித்த அயோக்கியர்களின் காலம் அது.
அவருக்கும் இதெல்லாம் தெரியாது. சிலர் அவரை ஏமாற்றி அவரது பாடல்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் நிரந்தர உரிமம் (perpetual licence) ஆக வாங்கி உள்ளனர். அது இயற்கை நியதிக்கு எதிரானது. அதை எதிர்த்து அந்த நிறுவனங்களுடன் அவர் சட்டப்போராட்டம் நடத்துகிறார். அதில் வெல்வாரா, தோற்பாரா என்பதெல்லாம் வேறு விஷயம்.
ஆனால், அவருக்கு அந்த உரிமை உள்ளது. ஒருவேளை அவர் இந்தப் போராட்டத்தில் வென்று, அதன்மூலம் அவருக்கு புதிய வருமானம் வந்தாலும் அவற்றை திரையிசைக் கலைஞர்களின் சங்கத்துக்கே முழுமையாக செல்லும்படி எழுதித் தந்துள்ளார். அவரது வாரிசுகளுக்குக் கூட தரவில்லை.

மஞ்சுமல் பாய்ஸ் குழுவிற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் கூட அந்தச் சட்டப் போராட்டத்தின் ஒரு பகுதிதான். ஒரு வழக்கில் தொடர்புள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுவதைப் போல இயல்பானது. அவர்களிடம் அந்தப் பாடலை பயன்படுத்தும் உரிமையை விற்ற நிறுவனம் அதை எதிர்கொள்வார்கள்.
இதையெல்லாம் செய்தி ஆக்கி இம்ப்ரெஷன் தேடும் ஊடகங்கள் இந்தத் தலைமுறையின் சாபக்கேடு. தனிப்பட்ட முறையில் அவர் பேசும் பேச்சுகள், செயல்களால் அவர்மீது ஏற்படும் கோபங்கள் இயல்பானவை. ஆனால், அதை முழுக்க உழைப்பாலும், அறிவாலும் உருவான அவரின் மேதைமையின் மீது வன்மமாகக் காட்டுவது மனிதர்களின் கீழமை. இயலாமை. போதாமை." இவ்வாறு எழுத்தாளர் எஸ்கேபி கருணா தனது பதிவில் கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications