"எவ்வளவு பழிகள்.. அவதூறுகள்.." சட்டசபையிலேயே உணர்ச்சிகரமாக பேசிய முதல்வர் ஸ்டாலின்.. பொளேர்!
சென்னை: எனக்கு எதிராக சொல்லப்படும் பழிகள் என்னை முடக்கி விடாது, எனக்கு இது மேலும் உத்வேகத்தையே கொடுக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் உணர்ச்சிகரமாக பேசினார்.
Recommended Video
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு, மின் பிரச்சனை, நீட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கொரோனாவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு இருக்கும் தடுப்பு நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

உருக்கம்
தனக்கு எதிராக வைக்கப்படும் அரசியல் விமர்சனங்கள் குறித்து உணர்ச்சிகரமாக பேசிய முதல்வர் ஸ்டாலின், என் மீது சொல்லப்பட்ட பழிகள், அவதூறுகள், அவமானங்கள் மேலும் உழைக்க உந்துகின்றன. என் மீது சொல்லப்படும் பழிகள் என்னை முடக்கி விடாது. எனக்கு இது மேலும் உத்வேகத்தையே கொடுக்கும். தலைவரின் மகன் என நான் பகட்டு காட்டியதில்லை.

பொறுத்து ஆட்சி
நேர்மையான முறையில், மக்கள் வாக்களித்து நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். பொறுத்தார் பூமியாழ்வார் என்பது பழமொழி. அப்படித்தான் நாங்கள் பொறுமையாக இருந்தோம். நாங்கள் பத்தாண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம். எங்கள் வாக்குறுதிகளை வேகமாக நிறைவேற்றி வருகிறோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

நம்பிக்கை
யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம். துளி அளவும் சந்தேகம் வேண்டாம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனாவிற்கு இந்த அரசு முற்றுப்புள்ளி வைக்கும். அண்ணாவின் அரசியல் வாரிசு, கலைஞரின் கொள்கை வாரிசு நான். அவர்களின் பாதையில் நான் செல்வேன். அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்கமுடியாத யானை.

திமுக
யானைக்கு 4 கால்கள் தான் பலம்.. அதுபோல திமுகவுக்கு சமூகநீதி, மொழிபற்று, சுயமரியாதை, மாநில உரிமை போன்ற 4 கொள்கைகள் தான் பலம். இந்த 4 கொள்கைகளை அடிப்படையாக வைத்தே திமுக செயல்படும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். இன்று சட்டசபையில் பேசும் போது முதல்வர் ஸ்டாலின் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications