வேதனையைக் கிளப்புது வெங்காயம்! ஒரு கிலோ எவ்வளவு விலை தெரியுமா? உரிக்காமலேயே அழும் இல்லத்தரசிகள்!
சென்னை: மழைப் பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 100 ரூபாய் வெங்காயம் விற்பனையானது. இந்நிலையில் தற்போது மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெங்காயம் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 120க்கு விற்பனையாகிறது. மேலும், வரும் நாட்களில் 150 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
இல்லத்தரசிகள் தினம் தோறும் சமையல் செய்வதற்கு வெங்காயம் முக்கிய பொருளாக பயன்படுத்துகின்றனர். சமீபகாலமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டே வருவதால் இல்லத்தரசிகள் வெங்காயத்தை பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பெரிய வெங்காய மார்க்கெட்டுகளுக்கு தினந்தோறும் சின்ன வெங்காயம் 30 லாரிகளும் பெரிய வெங்காயம் 20 லாரிகள் மூலம் விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக கடுமையான வறட்சி வெங்காய வரத்து பாதியாக குறைந்து கொண்டே வந்தது.
வெங்காயம்
இதனால் வெங்காயத்தின் விலையேற்றமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வியாபாரிகள்
பொதுமக்கள் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வெங்காயம் வியாபாரிகள் கூறுகையில்,"
தற்போது சின்ன வெங்காயம் மொத்த வியாபாரிகளிடம் கிலோ103 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் வெங்காயம் நடவு செய்வதை விவசாயிகள் நிறுத்திவிட்டனர்.
கடுமையான வறட்சி
தற்போது விலை உயர்வு ஏற்பட்டபோது வெங்காயத்தை நடவு செய்யலாம் என்று விவசாயிகள் நினைக்கும் போது கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால் வெங்காயம் நடவு செய்ய முடியவில்லை. 10 டன் வெங்காயம் வரவேண்டிய விவசாய தோட்டத்தில் 3 டன் வரை மட்டுமே வரத்து உள்ளது. சாகுபடி செலவு 70 ரூபாய் வரை ஆகும் என்பதாலும் வாகனச் செலவுடன் சேர்த்து 90 ரூபாய் வரை செலவாகும் என்பதால் விவசாயிகள் வெங்காயம் சாகுபடி செய்வதில்லை.
விலை உயர்வு
இதனால் வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் பலன் இல்லை. பெரிய வெங்காயத்தைப் பொறுத்தவரை மூன்று மாதத்திற்கு முன்பு மகாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் 20 ரூபாய் வரை 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அங்கு மழை பொழிவு இருந்ததால் இருப்பு வைக்கப்பட்ட வெங்காயம் அழுகி கெட்டுப் போய் விட்டதாலும் குறைந்த அளவில் தற்போது வந்து கொண்டுள்ளது. இதனால் விலை உயர்ந்து 55 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தற்போது பெங்களூர் வெங்காயம் 40 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இரண்டு வெங்காயமும் விலை உயர வாய்ப்பு உள்ளது. சின்ன வெங்காயம் உடுமலை தாராபுரம், துறையூர் போன்ற பகுதிகளிலிருந்து வந்து கொண்டுள்ளது தண்ணீர் உள்ள விவசாயிகள் மட்டுமே வெங்காயம் சாகுபடி செய்கின்றனர். இதனால் வரத்து வெகுவாக குறைந்துள்ளதாகவும், எனவே வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 150 ரூபாய் வரையும், பெரிய வெங்காயம் 75 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள். ஏற்கனவே அத்யாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், வெங்காய விலையும் கடுமையாக உயர்ந்து கொண்டே வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
